கார்த்திகை தீபம்: தெரிய வந்த தீபாவின் தாலி ரகசியம்..ஜானகி எடுத்த முடிவு, நடக்க போவது என்ன?
Karthigai Deepam Today`s Episode Update: அதிரடியான திருப்பங்களுடன் கார்த்திகை தீபம், இன்று நடக்க போவது என்ன? இன்றைய எபிசோட் அப்டேட் இதோ
தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்' சீரியல்.
கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 45 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். ராஜ ஸ்ரீ-யின் கையில் கதிரின் செல்போன் கிடைத்த நிலையில் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, ராஜ ஸ்ரீ அந்த ஃபோனில் இருந்த வீடியோவை பார்த்து விட இதை வைத்து கல்யாணத்தை நிறுத்தி விடலாம் என திட்டமிடுகிறாள்.
மேலும் படிக்க | கதாநாயகனாக நடிக்கப்போகும் விஜய் டிவி ரக்ஷன்! ஹீரோயின் இவங்களா?
மறுபக்கம் கல்யாண மண்டபத்தில் இருந்து வெளியே வந்த தீபா தனது தம்பி இனியனை பார்க்க வர அந்த இடத்தில் அவன் இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். பிறகு துரை தீபாவுக்கு போன் செய்து உன்னுடைய தம்பி இப்போ என்னுடைய கஸ்டடியில் இருக்கிறான், நீ நான் சொல்ற இடத்துக்கு வந்தா உன் தம்பியை விட்டு விடுகிறேன் என சொல்ல தீபா அவன் சொல்லும் இடத்திற்கு கிளம்பி செல்கிறாள்.
செல்வதற்கு முன்பாக கார்த்தியிடம் விசயத்தை சொல்லலாமா என யோசிக்கும் தீபா கார்த்தியை தொந்தரவு செய்ய வேண்டாம் என முடிவெடுத்து தனியாக கிளம்பி போகிறாள். தீபாவை பார்த்ததும் துரை சொன்ன மாதிரியே வந்துட்ட என சொல்லி இனியனை விடுவித்து தீபாவை சிறை பிடிக்க அப்போது தீபாவின் செல்ஃபோன் தவறி இனியன் பாக்கெட்டுக்குள் விழுகிறது. பிறகு துரை நட்சத்திராவிற்கு ஃபோன் செய்து உன்னுடைய கல்யாண கிப்டாக தீபாவை கொல்ல போகிறேன் என சொல்ல நட்சத்திரா சந்தோஷப்படுகிறாள்.
அதன் பிறகு துரை தீபாவை கத்தியால் குத்த போக உள்ளே வரும் இனியன் நிறுத்துடா, இப்ப உனக்கு தைரியம் இருந்தா என் அக்கா மேல கை வைடா பார்க்கலாம் என சத்தம் போட்டு விசில் அடிக்க கார்த்தி மாசாக என்ட்ரி கொடுத்து அனைவரையும் அடித்து வெளுத்து வாங்குகிறார். பிறகு இனி என் கார்த்திக்கு போன் செய்து விஷயத்தை சொன்னது தெரிய வருகிறது.
அதன் பிறகு கார்த்திக் தீபாவிடம் நீங்க என்னுடைய கல்யாணம் நடக்கும் மண்டபத்துக்கு வந்து இருந்தீங்களா என்று கேட்க அவன் இல்லை என பொய் சொல்லி விடுகிறாள். பிறகு தீபாவுக்கு தன் மேல் காதல் இருக்கானு கேட்கலாமா என யோசிக்கும் கார்த்திக் அதன் பிறகு கேட்க வேண்டாம் என முடிவெடுத்து கேட்காமல் அமைதியாகி விடுகிறான்.
வீட்டுக்கு வந்த தீபா எல்லோரும் தூங்கிய பிறகு ரூமில் என்னுடைய மனசு முழுக்க கார்த்திக் தான் இருக்காரு, விடிந்தால் கல்யாணம் இப்போ நான் என்ன பண்றது என தனது கழுத்தில் இருக்கும் தாலியை பார்த்து குழம்பிக் கொண்டிருக்க அந்த நேரம் ரூமுக்குள் வரும் ஜானகி இதைப் பார்த்து அதிர்ச்சியாகி தீபாவை பளார் என அறைகிறார். பிறகு நடந்ததை பற்றி விசாரிக்க தீபா கார்த்தி பரிகாரம் செய்து விட்ட தாலி தனது கழுத்தில் வந்து ஏறிய விஷயத்தை சொல்கிறாள்.
விடிஞ்சா உனக்கு கல்யாணம் அதை கழட்டி போட வேண்டியதுதானே என ஜானகி சொல்ல தீபா இரண்டு முறை முயற்சி செய்தும் அதை கழட்ட முடியவில்லை என சொல்கிறாள். இதனால் ஜானகி அப்போ இதுக்கு ரெண்டே வழி தான் இருக்கு ஒன்னு தாலியை கழட்டனும் இல்லனா கார்த்திக்கிடம் இதுபற்றி பேசணும் என சொல்லி கார்த்தியை பார்க்க முடிவெடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ