Karthigai Deepam TV Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமியை கடத்தி வந்த தோப்புக்குள் கார்த்திக் நுழைந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது, கார்த்திக் ரவுடிகளிடம் சண்டையிட்டு கொண்டிருக்க மறுபக்கம் ரவுடி மணியும் அவனது ஆட்களும் சேர்ந்து அபிராமியை உயிரோட புதைக்கின்றனர். இதனையடுத்து கார்த்திக் தன்னுடன் சண்டை போட்ட ரவுடிகளை அடித்து உள்ளே நுழைய மணியும் அவனது ஆட்களும் எதிரில் வருகின்றனர். 


அவர்களை பிடித்து எங்க அம்மா எங்க டா என்று கேட்க எங்களுக்கு தெரியாது என்று உண்மையை மறைக்கின்றனர். இதே சமயத்தில் கார்த்திக் அனுப்பிய லொகேஷனை வைத்து போலீஸ் இந்த தோப்புக்கு வந்து விடுகின்றனர். மணியையும் ரவுடிகளையும் மொத்தமாக கைது செய்து ஜெயிலுக்குள் அடைக்கின்றனர். 


மேலும் படிக்க | Summer Memes : “எரியுதுடி மாலா..” தமிழகத்தில் தாளாத வெயில்-இணையத்தில் நெட்டிசன்களின் மீம் கலாட்டா!



இருப்பினும் கார்த்திக்கு அம்மா இந்த தோப்புக்குள் தான் இருக்கிறார் என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. இதனால் உள்ளே சென்று அபிராமியை தேட மண் வெட்டி, மணி குவியல் இதையெல்லாம் பார்த்து சந்தேகப்பட்டு புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி அபிராமியை வெளியே எடுக்கிறான். மூச்சு பேச்சு இல்லாமல் இருக்கும் அம்மாவை தூக்கி கொண்டு ஹாஸ்பிடலில் அனுமதிக்கிறான். 


இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | Pushpa 2 The Rule: இணையத்தில் சாதனை படைத்துள்ள அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 டீசர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ