`ரௌடி` பேபிக்கு `கார்த்திக்` புகழ் திவ்யாவின் அட்வைஸ்
ஆண் நண்பருடன் சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கும் ரௌடி பேபி சூர்யாவுக்கு ’கார்த்திக்’ புகழ் திவ்யா அட்வைஸ் கொடுத்துள்ளார்.
தன்னை காதலித்து ஏமாற்றிச் சென்ற கார்த்தி என்பவரை தேடிச் செல்கிறேன் என வேறு, வேறு நபர்கள் மூலம் தாலிக்கட்டி கொள்வது போன்ற வீடியோக்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளவர்தான் கார்த்திக் புகழ் திவ்யா. சமீபத்தில் திருநங்கைகள் பணம் பறிக்கின்றனர் என திட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் பலர் திவ்யாவில் வீட்டிற்கே சென்று அடித்து துவைத்து திவ்யாவை காலில் விழ வைத்து, மன்னிப்பு கேட்க வைத்தனர்.
ALSO READ | ‘ஊ சொல்றியா மாமா’ சமந்தாவின் கவர்ச்சியால் கலங்கும் இணையம்
இதனிடையே தனியார் தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திவ்யாவிற்கும் சுகந்தி என்ற பெண்ணிற்கு அடிதடி சண்டைகள் நடந்த வீடியோக்களும் வெளி வந்தன. இந்நிலையில், கடந்த வாரம் யூடியூப் வீடியோக்களில் தன்னையும் தன் குடும்பத்தினரையும் ஆபாச வார்த்தைகளை பேசுவதாகவும் சிக்கா என்பவருடன் சேர்ந்து அத்துமீறி நடந்து கொள்வதாகவும் கோவையை சேர்ந்த ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவை சைபர் கிரைம் போலீஸார் ரவுடி பேபி சூர்யாவையும் அவரது காதலன் சிக்காவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்களுக்காக ’கார்த்திக்’ புகழ் லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை ரிலீஸ் செய்துள்ளார். அதில் *சூர்யா அக்கா நீங்கள் நல்ல நாளில் ஜெயிலுக்கு போயுள்ளீர்கள். நீ அங்கையே இருந்துகொள் அக்கா. வெளியே வந்தால் வீடு தர மாட்டார்கள். ஜெயிலில் இருப்பது தான் நல்லது. அங்கு சிறையில் நல்ல உணவு கொடுப்பார்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.
ALSO READ | 'ஓ சொல்றியா' பாட்டு பாக்க ஆசையா? ரிலீஸ் தேதி அறிவிப்பு
டிக் டாக்கால் சமூக வலைத்தளங்களில் நுழைந்த இவர்கள் மட்டுமில்லாது இலக்கியா, திருச்சி சாதனா, ஜி.பி.முத்து மேலும் சிலர் டிக்டாக் செயலி முடக்கத்திற்கு பிறகு முகநூல், யூடியூப் போன்ற வலைதளங்களில் ஆபாச நடனம், பேச்சு மட்டுமின்றி ஒருவரை மற்றொருவரின் தனிப்பட்ட வாழ்க்கை, அந்தரங்க விஷயங்களை ஆபாசமாக திட்டிக்கொள்வதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது அதிகரிக்கும் கொரானா ஓமிக்ரான் தொற்றால் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருவதால் இது போன்ற ஆபாச பதிவிடுபவர்களை கண்காணித்து காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR