இந்தியாவின் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, அதன் தமிழ் ஒரிஜினல் திரில்லர் தொடரான ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் (Snakes & Ladders) வெளியீட்டுத் தேதியை அறிவித்தது . கல்யாண் சுப்ரமணியன் (ஒரு ஸ்டோன்பெஞ்ச் புரொடக்‌ஷன்) தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subbaraj), தொகுத்த இந்த தமிழ் ஒரிஜினல் தொடர் அசோக் வீரப்பன், பரத் முரளீதரன் (Ashok Veerappan, Bharath Muralidharan) மற்றும் கமலா அல்கெமிஸ் இயக்கத்தில், கமலா ஆல்கெமிஸ் & திவாகர் கமல் (Kamala Alchemis & Dhivakar Kamal) ஆகியோரால் உருவாக்கப்பட்டது. எதிர் வரவிருக்கும் இந்த டார்க் ஹ்யூமர் த்ரில்லரில் நவீன் சாந்ரா (Naveen Chandra), நந்தா (Nandha), மனோஜ் பாரதிராஜா (Manoj Bharathiraja), முத்துக்குமார் (Muthukumar), ஸ்ரீந்தா(Srinda), ஸ்ரீஜித் ரவி (Sreejith Ravi), சம்ரித் (Samrith), சூர்யா ராகவேஷ்வர் (Surya ragaveshwar), சூர்யகுமார்,(Surya kumar), தருண் மற்றும் சாஷா பரேன் (Tarun and Sasha Bharen) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்த பொண்ணுக்கு இவ்ளோ வயசா? ‘மகாராஜா’ விஜய் சேதுபதி மகள் பற்றிய விவரம்!


பிரைம் வீடியோவில் வெளியிடப்படும் இந்த முதல் தமிழ் டார்க்-ஹூமர் த்ரில்லர் ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் அக்டோபர் 18 முதல் தமிழில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. அமேசான் பிரைமில் வெறும் ரூ. 1499 செலுத்தி இந்த வெப் சீரிஸையும், மற்ற பொழுதுபோக்கு அம்சங்களையும் அனுபவித்து மகிழலாம். 2000 ஆண்டு கால மத்தியில் நடைபெறுவதாக அமைக்கப்பட்ட இந்த இயற்கைக்கு மாறான அதேசமயம் மனதைக் கவரும் டார்க் ஹ்யூமர் திரில்லர் காலம் நட்பை அதன் அனைத்து வடிவங்களிலும் கொண்டாடுகிறது. தங்களின் கவனக்குறைவால் ஒரு புதிரான சூழலில் சிக்கி அதிலிருந்து விடுபட போராடும் கில்லி, இறை, சாண்டி மற்றும் பாலா ஆகிய நான்கு பள்ளி நண்பர்களின் சாகச வாழ்க்கைப் பயணத்தை இது பின்தொடருகிறது. 


சவால் மிகுந்த சூழ்நிலைகள் மற்றும் தனிப்பட்ட போராட்டங்களுக்கு மத்தியில் வழி நெடுக தவிர்க்க முடியாத அடையாளங்களை விட்டு, செல்லும் வழியில் கேள்விக்குரிய தேர்வுகளை மேற்கொண்டு லாகவமாக கடந்து செல்லும் அவர்களின் இந்தப் பயணம் இறுதியாக எதிர்பாராத விதமாக தன்னைத் தானே அறிந்து உணரும் பாதைக்கு அவர்களை இட்டுச்செல்கிறது. இந்தத் தொடரை தொகுத்து நிர்வகித்த கார்த்திக் சுப்பராஜ் கூறுகையில், “ஸ்னேக்ஸ் & லேடர்ஸ் இல் பணிபுரிந்ததில் நான் முழுமையான மகிழ்ச்சியை உணர்ந்தேன் மற்றும் இந்த செயல்திட்டத்தில் பிரைம் வீடியோவுடன் கூட்டிணைந்து பணிபுரிய கிடைத்த வாய்ப்பிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த நான்கு நண்பர்களின் கதைக்கு உயிரூட்டிய அனுபவம் நம்பவே முடியாத அளவு உற்சாக்கத்தை அளித்தது. இந்தத் தொடரின் ஒவ்வொரு கதாபாத்திரமும் பதின்பருவ வயதினரின் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த வாழ்க்கையை பிரதிபலிக்கும் தனித்துவம் மிக்க ஆளுமை மற்றும் சிக்கலான உறவுகளை வெளிப்படுத்துகிறது. 


அவர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கும் மர்மத்தை விடுவிக்க முயற்ச்சிக்கும் அவர்களின் இந்தப் பயணம் பார்வையாளர்களை தொடக்கத்திலிருந்து இறுதி வரை கவர்ந்திழுத்து கட்டிப்போடும்நட்பின் உணர்வு பூர்வமான நுணுக்கங்கள், தனிநபர் வளர்ச்சி மற்றும் பார்வையாளர்காலோடு ஒத்திசைந்து எதிரொலிக்கும் அர்த்தமுள்ள உணர்ச்சிப் பிணைப்புகள் மற்றும் பாடங்கள் ஆகியவற்றின் நுணுக்கங்களை தூண்டுவதோடு பொழுதுபோக்காகவும் இருக்கக் கூடிய ஒரு கதையை உருவாக்குவதை எங்கள் கிரியிலாக்காக்க் கொண்டிருந்தோம். பிரைம் வீடியோவில் வெளியிடப்படும் இந்தத் தொடர் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களைக் கவரும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.


மேலும் படிக்க | தளபதி 69 பட நடிகை மமிதா விஜய் ரசிகையா? சூர்யா ரசிகையா?


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ