நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள சுல்தான் திரைப்படம் சூப்பரான வரவேற்பை பெற்றுள்ளது. விஜயின் மாஸ்டருக்கு பிறகு நல்ல தொடக்கத்தைக் கொடுத்துள்ள தமிழ் திரைப்படம் சுல்தான் என்று தமிழ் திரையுலகத்தினர் கருதுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்த்தியின் சுல்தான் ரசிகர்களின் ஆர்வத்திற்கு தீனி போடுவதாக இருக்கிறது. சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் உட்பட அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்திருக்கிறது.


கார்த்தி மற்றும் ரஷ்மிகா மந்தன்னா நடித்த சுல்தான் படம் வெளியான முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்திருக்கிறது. கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வரும் நிலையிலும் கூட பாக்கியராஜ் கண்ணன் இயக்கிய சுல்தான் திரைப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. இதன் பொருள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்திருக்கிறார் சுல்தான் என்று சொல்லப்படுகிறது.


ALSO READ: நடிகர் கார்த்தியின் சுல்தான் பட ட்ரைலர் எப்போது.. வெளியானது தகவல்..!!!


அதுமட்டுமல்லாமல், நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்கில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைப் போஅல்வே சுல்தானும் திரையரங்குகளில் முதல் நாள் வசூலை அபாரமாக அள்ளியுள்ளது.


கொரோனாவுக்கு பிறகு வெளியான தமிழ்படங்களில் மாஸ்டரை தொடரும் சுல்தான் என்று சொல்கின்றனர்.  இந்த பிளாக்பஸ்டர் வெற்றி நடிகர் கார்த்தியின் திரையுல பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமையும். 


2021 ஜனவரியில் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசான விஜயின் மாஸ்டர் திரைப்படம் தெலுங்கிலும் சக்கைபோடு போட்டது. கொரோனா வைரஸின் கடினமான நேரத்தில் சுல்தான் திரைப்படம் திரையுலகிற்கு ஆசுவாசத்தைக் கொடுத்துள்ளது. 


இதுதொடர்பாக சுல்தான் திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இன்று காலை சமூக ஊடகங்களில் தனது மகிழ்ச்சியை பதிவிட்டுள்ளார்.



"எங்களுக்கு ஒரு பெரிய தொடக்கத்தை வழங்கிய பார்வையாளர்களுக்கு நன்றி. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.  உண்மையில் சுல்தான் திரைப்படம் பலரின் வாழ்வில் சிறந்த திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொழில்ரீதியாக மிகச் சிறந்த தொடக்கமாகும். இந்த கடினமான நேரத்தில் ஒட்டுமொத்த திரையுலகிற்கும் இது ஒரு நல்ல செய்தியாக இருக்கிறது. மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்! #ஜெய்சுல்தான் ” என்று  சுல்தான் திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.



சென்னையில் மட்டும் சுல்தான் இதுவரை 55 லட்சம் ரூபாய் கலெக்‌ஷன் ஆகவுள்ளது. FilmiBeat மதிப்பீடுகளின்படி, சுல்தான் திரைப்படத்தின் தொடக்க நாள் வசூல் 6 -8 கோடி ரூபாய் இருக்கும்.   குற்றவாளிகளால் வளர்க்கப்பட்ட ஒரு குழந்தையின் வாழ்க்கையை கதைக்களமாக கொண்டுள்ளது சுல்தான் திரைப்படம்.


அப்பாவின் மரணத்திற்கு பிறகு குற்றவாளிகளான சகோதரர்களை காவல்துறையிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருக்கிறார். சுல்தான் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஒலிப்பதிவு விவேக்-மெர்வின்.


ALSO READ: Karnan Teaser: சம்பவம் இருக்கு! நாளை கர்ணன் படத்தின் டீசர் வெளியீடு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR