நடிகர் கார்த்தியின் சுல்தான் பட ட்ரைலர் எப்போது.. வெளியானது தகவல்..!!!

படத்தை OTT தளங்களில் வெளியிடுவதாக தகவல்கள் வந்த நிலையில், படக்குழு ஏப்ரல் 2ம் தேதி படத்தை  வெள்ளித்திரையில் பார்க்கலாம் என அறிவித்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தனர். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 20, 2021, 09:08 PM IST
  • படத்தை OTT தளங்களில் வெளியிடுவதாக தகவல்கள் வந்த நிலையில், படக்குழு ஏப்ரல் 2ம் தேதி படத்தை வெள்ளித்திரையில் பார்க்கலாம் என அறிவித்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தனர்.
  • ரசிகர்கள் பலரும் நெடுநாட்களாக காத்திருக்கும் சுல்தான் படத்தின் ட்ரைலர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தியின் சுல்தான் பட ட்ரைலர் எப்போது.. வெளியானது தகவல்..!!! title=

ரெமோ படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி மற்றும் ரஷ்மிகா நடிக்கும் படம் தான் சுல்தான்.

இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அவர் தமிழ்ப் படத்தில் நாயகியாக நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப் போனது.

படத்தை OTT தளங்களில் வெளியிடுவதாக தகவல்கள் வந்த நிலையில், படக்குழு ஏப்ரல் 2ம் தேதி படத்தை  வெள்ளித்திரையில் பார்க்கலாம் என அறிவித்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தனர். 

இந்த படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், அது எப்போது வெளியாகும்  என்ற தகவல் கார்த்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ | நடிகர் கார்த்தியின் சுல்தான்....வெளியாகி வைரலாகும் பர்ஸ்ட் லுக்

எஸ் ஆர் பிரபு தனது ட்விட்டர் பதிவில் , சுல்தான் படத்தின் ட்ரைலர் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது என அறிவித்துள்ளனர்.

இப்படத்திலிருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. மூன்றுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

ஜெய் சுல்தான்', 'யாரையும் இவளோ அழகா பார்க்கல' , மற்றும்  'எப்படி இருந்த நாங்க' என்ற அந்த மூன்று பாடல்களும் வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் பலரும் நெடுநாட்களாக காத்திருக்கும் சுல்தான் படத்தின் ட்ரைலர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பில், சுல்தான் படத்தின் ட்ரைலர் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது என அறிவித்துள்ளனர்.

ALSO READ | Happy Birthday கார்த்திக் சுப்புராஜ் என வாழ்த்துமழை பொழியும் வெள்ளித்திரை

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News