SIEGER PICTURES நிறுவனம் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாகத் தயாரிக்க, இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை ரக்ஷிதா மஹாலஷ்மி, அபி நட்சத்ரா,  மற்றும் ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர், சிவம் நடிப்பில், சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள படம் "Extreme". இம்மாதம் 20 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது, எக்ஸ்டிரீம்  இந்தப்படம் பற்றி எந்த ஒரு விசயமும் தெரியாமல் தான் கலந்துகொண்டேன். டிரெய்லர் பார்த்த போது, நாம் நினைக்காத விசயத்தை எல்லாம் செய்கிறார்களே என மகிழ்ச்சியாக உள்ளது. டைட்டிலே வித்தியாசமாக உள்ளது. சீகர் பிக்சர்ஸ் நிறைய வெற்றியோடு பயணிக்க வேண்டுமென வாழ்த்துகிறேன். ரக்‌ஷிதா மஹாலட்சுமியின் ரசிகன் நான், கடந்த வாரம் ஒரு படம் பார்த்தேன், அருமையாக நடித்திருந்தார். இந்தப்படத்திலும் நன்றாக நடித்துள்ளார். அபி நட்சத்திரா அயலி மூலம் கலக்கியவர், இதிலும் நன்றாக நடித்துள்ளார். தொழில் நுட்ப கலைஞர்களும், மிக அற்புதமாக பணிபுரிந்துள்ளனர். இசை அருமை, ஒளிப்பதிவு நன்றாகக் காட்சிப்படுத்தியுள்ளார். தன் கணவரின் ஆசைக்குப் பின்புலமாக இருந்து படத்தைத் தயாரித்திருக்கும், தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துக்கள்.


மேலும் படிக்க | விடாமுயற்சி படத்தில் மாற்றம்? பொங்கலுக்கு வெளியாகும் வீர தீர சூரன்?


எப்போதும் வெளியிலிருந்து,  சினிமாக்காரர்களை கலாய்ப்பார்கள் ஆனால் நிஜத்தில் சினிமாக்காரர்களை விடக் கேவலமானவர்கள் இங்கு இருக்கிறார்கள். சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு. விஜய் இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார் அதற்குள் அவரை கட்டம் கட்டி விமர்சிக்கிறார்கள். அவர் முதலில் அரசியல் செய்யட்டும் பின் விமர்சிக்கலாம். சினிமாவில் இருந்து நிறைய முதல்வர்கள் வந்துள்ளார்கள். சினிமாவிலிருந்து யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். இந்த நேரத்தில் சினிமாவுக்கு வந்திருக்கும் சீகர் பிக்சர்ஸுக்கு வாழ்த்துக்கள். இயக்குநருக்கு என் வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.


தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது, இந்தப்படம் டிரெய்லர் பார்த்தேன், மனம் விட்டு வாழ்த்த வைத்துவிட்டது. மியூசிக், கேமரா, நடிப்பு எல்லாம் அருமையாக உள்ளது.  இயக்குநர் எல்லோரையும் வேலை வாங்கியுள்ளார். இவரின் தூவல் படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்றனர். அது தமிழ்நாட்டின் சாபம், ஏதோ மொழி புஷ்பா படத்திற்கு 500 திரையரங்குகள் தந்துள்ளார்கள். முதலில் தமிழ்ப்படத்திற்குத் திரையரங்குகள் தாருங்கள், எத்தனை காலம் புஷ்பா மாதிரி படங்கள் உங்களைக் காப்பாற்றும்? அதனால் எப்போதும் தமிழுக்கு முக்கியத்துவம் தாருங்கள். தமிழ் நடிகர்களை நடிக்க வையுங்கள். அதன் பிறகு மற்ற மொழிகளுக்கு வாய்ப்பு கொடுங்கள்.


இப்போதெல்லாம் நல்ல கதையுள்ள சின்ன படங்கள் தான் ஜெயிக்கிறது. லப்பர் பந்து படம் பெரிய படங்களைத் தாண்டி ஜெயித்தது. அதை மக்கள் தான் ஜெயிக்க வைத்தார்கள்.  அது போல் இந்தப்படத்திலும் எல்லா மனமும் மிக நன்றாக உள்ளது. படம் கண்டிப்பாக ஜெயிக்கும் வாழ்த்துக்கள். கடந்த வாரம் ஒரு பெரிய படத்தைப் பத்திரிக்கையாளர்கள் தோற்கடித்துவிட்டதாகச் சொன்னார்கள். படம் நன்றாக இருந்தால் யாராலும் அதன் வெற்றியைக் குறைக்க முடியாது. நல்ல படம் எடுங்கள் பத்திரிக்கையாளர்கள் ஆதரவு தருவார்கள் என்றேன். அதே போல் நல்ல படமெடுத்த இந்தக்குழு ஜெயிப்பார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


நடிகை ரக்‌ஷிதா மஹாலட்சுமி பேசியதாவது, பிக்பாஸ் முடிச்சு வந்தபோது தான் இயக்குநர் எனக்கு போன் செய்தார். அவருக்கு முதலில் என்னை யாரென்று தெரியவில்லை. எனக்கு லுக் டெஸ்ட் எல்லாம் வைத்தார். அவருக்கு என்ன வேண்டும் என்பதில், மிகத் தெளிவாக இருந்தார். அவருக்கடுத்து சிவம் மிகக் கடினமாக உழைத்துள்ளார். இந்தப்படத்தில் மியூசிக் மிக அற்புதமாக வந்துள்ளது. டிரெய்லர் பார்த்த எல்லோரும் பாராட்டினார்கள். நான் நடிக்காமலிருந்தாலும் இந்தப்படத்தை வியந்து பார்த்திருப்பேன். அந்தளவு நல்ல கதையம்சம் உள்ள படம். எல்லோரும் எவ்வளவு கடுமையாக இப்படத்திற்காக உழைத்துள்ளனர் என அருகிலிருந்து பார்த்துள்ளேன். படம் மிக அருமையாக வந்துள்ளது. உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.


இயக்குநர் பேரரசு பேசியதாவது, இயக்குநர் படத்தை மிகக் குறைந்த காலத்தில் எடுத்ததாகக் கூறினார். இந்த காலகட்டத்தில் ஒரு படத்தை மிக அழகாக பிளான் செய்து, மிக சிக்கனமாக எடுப்பது தான் மிகச்சிறந்த இயக்குநருக்கான திறமை. இவர்கள் அதைத் திறம்படச் செய்து நல்ல படத்தைத் தந்துள்ளார்கள். ரக்‌ஷிதா கண் பயங்கர ஈர்ப்பாக இருப்பதாகச் சொன்னார் ஆர் வி உதயகுமார் சார், அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். ரக்‌ஷிதா நன்றாகவும் நடித்துள்ளார். பெண்களுக்கான நல்ல விசயத்தைச் சொல்லும் படமாக இப்படம் வந்துள்ளது. சினிமா  தான் நம் நாட்டில் உயர்ந்த விசயம், பெண்ணிற்குப் பாதுகாப்பை, குடியின் தீமையை, அம்மா அப்பா பாசத்தை என பல நல்ல விசயங்களை, சினிமா தான் சொல்கிறது.


அரசியல்வாதி நடிக்க வந்தால் ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் சினிமாக்காரன் அரசியலுக்கு வந்தால் ஏன் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?. எல்லோரையும் எல்லா காலகட்டத்திலும் கூத்தாடிகள் எனத் தான் சொல்லிக்கொண்டிருக்கிறோம். கூத்தாடி தான் நாட்டுக்கு நல்லது சொல்கிறான். கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் இன்று விஜய் என எல்லோருமே கூத்தாடிகள் தான். ஜாதியைப் பேசுவது எப்படி தவறோ?, அது போல் கூத்தாடியை இழிவாகப் பேசுவது தவறு தான். அரசியல்வாதியை விட சினிமாக்காரன் எவ்வளவோ மேல். ஒரு நல்ல விசயத்தைப் பேசும் இப்படத்தை ஆதரியுங்கள் நன்றி.


மேலும் படிக்க | 8 ஆண்டுகளுக்கு முன்பு... ராஷ்மிகாவிற்காக விஜய் தேவர்கொண்டா எழுதிய வார்த்தைகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ