மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பன்’ படத்தின் டிரெய்லர் அடுத்த வாரம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘விக்ரம் வேதா’ படத்துக்குப்ப் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கருப்பன்’. ஜல்லிக் கட்டை மையமாக வைத்து கிராமத்து பின்னணியில் பொழுதுபோக்கு படமாக ‘கருப்பன்’ படத்தை உருவாக்கி வருகிறார்கள். இதன் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்தட வாரம் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்படுகிறது. அதேநேரத்தில் ‘கருப்பன்’ படத்தின் டிரெய்லர் அடுத்த வாரம் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.


இந்த மாதம் 29-ம் தேதி ‘கருப்பன்’ படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 



 


சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. 


'ரேணிகுண்டா' படத்தை இயக்கிய பன்னீர் செல்வம் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தான்யா நடித்துள்ளார். வில்லனாக நடிகர் பாபி சிம்ஹா நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். இமான் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இசை உரிமைசோனி நிறுவனம் பெற்றுள்ளது.