மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பன்' படத்தின் பாடல்களை நாளை வெளியாகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'விக்ரம் வேதா' படத்துக்குப்ப் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'கருப்பன்'. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தான்யா நடித்துள்ளார். வில்லனாக நடிகர் பாபி சிம்ஹா நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். இமான் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது.


'ரேணிகுண்டா' படத்தை இயக்கிய பன்னீர் செல்வம் இப்படத்தை இயக்கியுள்ளார்.


ஜல்லிக்கட்டை மையமாக வைத்து கிராமத்து பின்னணியில் பொழுதுபோக்கு படமாக 'கருப்பன்' படத்தை உருவாக்கி வருகிறார்கள். சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. 


இந்நிலையில் தற்போது படத்தின் பாடல்களை நாளை மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளனர். மேலும் இப்படத்தின் பாடல்களின் வரிகள் அடங்கிய வீடியோ செப்டம்பர் 1-ம் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.