கடந்த 1-ம் தேதி முதல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், மாணவர்கள், இளைஞ்சர்கள் என பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

#GoBackModi : உலக அளவில் டிரெண்டான மோடி!!


இன்று காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெறும் ராணுவக் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தார். பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


கருப்பு கொடி!! கருப்பு சட்டையுடன் இருக்கும் கருணாநிதி புகைப்படம்!!


இந்நிலையில், காவிரிக்காக போராடி வரும் போராளிகளை குறித்து நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டி உள்ளார். 


அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:-


வணக்கம்!!


எல்லோருக்கும் ஒரு குடும்பம் இருக்கு, அந்தக் குடும்பத்த காப்பாத்துவதற்காக வருமானத்தை நோக்கிய பயணம் இருக்குது. நமக்காகப் போராடுற போராளிகளுக்கும் அப்படிப்பட்ட குடும்பமும் இருக்கிறது, வருமானத்தை நோக்கிய பயணமும் இருக்குது.


ஆனா ஒரு பொது நலத்துக்காக சுயநலம் கருதாமல், குடும்பத்தை மறந்து வருமானத்தைத் துறந்து நமக்காக போராடுற போராளிகள் எவ்வளவு உயர்ந்தவர்கள். அப்படின்னு நாம் நினைத்துப் பார்க்கணும்.


ஏன்னா அப்படி சொல்கிறேன் என்றால், களத்தில் இறங்கிப் போராடும்போது அவர்கள் கைது செய்யப்படலாம், அவர்களின் வழக்கமான வாழ்க்கை பாதிக்கப்படலாம் என்பதைத் தெரிந்தும், ஒரு பொதுநலத்துகாக அவர்கள் போராடுகிறார்கள்.


இன்று அவர்களுடைய போராட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என்பதற்காக நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போராட்டக்களத்தில் நிற்பவர்கள் நம்மைவிட மிகவும் உயர்ந்தவர்கள். அவர்களுடைய தியாகத்தையும் வீரத்தையும் நான் வாழ்த்துகிறேன் என்று சொல்ல வரவில்லை.


ஏன்னா பொதுவா இப்ப எல்லோரும் சொல்றாங்க இல்லையா, வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அப்படின்னுட்டு, அதுக்கு காரணம் என்னென்னா, வாழ்த்துவதற்கு நாம யார வாழ்த்துறோமோ அவர்களை விட நமக்கு வயசு அதிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் அவர்களை வாழ்த்த முடியும். இல்லையென்றால் வணங்க வேண்டும் என்று சொல்வது உண்டு.


இந்தப் போராட்டக் களத்தில் நிற்கும் போராளிகள் நம்மைவிட என்னைவிட வீரத்திலும் தியாகத்திலும் உயர்ந்தவர்கள். ஆகவே அவர்களை நாம் மற்றும் நான் வாழ்த்த முடியாது. போற்ற முடியும், வணங்க முடியும் அவர்களை நான் போற்றுகிறேன் வணங்குகிறேன். நன்றி, வணக்கம்.