`கவினின் ஸ்டார்` - ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியானது
Kavin Star Movie: கவின் நடிப்பில் உருவாகி வரும் “ஸ்டார்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
Kavin Star Movie Release Date : நடிகர் கவின் நடிப்பில் உருவாகி வரும் “ஸ்டார்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன் விவரத்தை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
நடிகர் கவின்:
நடிகர் கவின், சின்னத்திரையில் இருந்த போதே பெருமளவு ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்து வைத்திருந்தார். பிறகு, திரைப்படங்கிளில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்தார். நேற்று இன்று நாளை, பீட்ஸா போன்ற படங்களில் சில மணித்துளிகள் வந்தாலும் ‘ஹே அது கவின்ல..’ என ரசிகர்களை சொல்ல வைத்தார். பின்னர் இவருக்கு கதாநாயகன் அந்தஸ்து கிடைத்தது. அதன்படி 2019 ஆம் ஆண்டு நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதன் பின்னர் லிஃப்ட்’ எனும் படத்தில் நடித்தார். ஹாரர் த்ரில்லர் படமாக உருவான இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இந்த படம் ரசிகர்களின் மத்தியில் ஓரளவு வரவேற்பினை பெற, அடுத்து இன்னொரு படத்திலும் நாயகனாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடிக்க அவருக்கு ஜோடியாக ‘டாடா’ என்ற எமோஷனல் காதல் கதையில் நடித்திருந்தார். இப்படம் ப்ளாக் பஸ்ட்ர் ஹிட் அடித்தது.
டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் கவின் :
இதனிடையே சமீபத்தில் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கும் படத்தில் கமிட்டானார் கவின். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தை ரோமியோ பிச்சர்ஸ் ராகுல் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக ‘அயோத்தி’ படத்தின் மூலம் பிரபலமான ப்ரீத்தி அஸ்ரானி நடித்து வருகிறார்.
ஸ்டார் பட அப்டேட் :
இந்நிலையில் தற்போது இயக்குனர் இளன் இயக்கத்தில் நடிகர் கவின் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கதாநாயகியாக அதிதி எஸ்.போஹன்கர் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. தற்போத படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பாக அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் வருகிற மே மாதம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Arun Vijay: அருண் விஜய் நடித்த மிஷன் அத்தியாயம் 1! ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ