Keerthy Suresh Marriage: பிரலபங்கள் தங்கள் சமூக வலைதளங்கள் மூலமாக ரசிகர்களுடன் உரையாடுவது வாடிக்கைதான். ட்விட்டரில் பிரத்யோக ஹேஷ்டேக் மூலம் கேள்வியெழுப்பி, பிரபலங்கள் பதில் சொல்வது, இன்ஸ்டாவில் கேள்வி - பதில் பகுதி மூலம் உரையாடுவது, லைவ் மூலம் உரையாடுவது என பல வசதிகளும் இன்றைய காலகட்டத்தில் அதிகரித்துவிட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், அவரிடம் கேள்வி கேட்கலாம் என குறிப்பிட்டிருந்தார். இதில், பலரும் கீர்த்தி சுரேஷிடம் பல்வேறு சுவாரஸ்யமான கேள்விகளை எழுப்பி பதிலையும் பெற்றனர். 



அதில், ஒருவர் கீர்த்தி சுரேஷின் திருமணம் எப்போது என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு கீர்த்தி சுரேஷ் வடிவேலுவின் மீம் புகைப்படத்தை பகிர்ந்து, 'தெரியாது' என்ற வகையில் பதில் அளித்துள்ளார். ரசிகரின் கேள்விக்கு நகைச்சுவையாகவும், சாமர்த்தியமாகவும் கீர்த்தி பதிலளித்ததாக அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 


மேலும் படிக்க | மாரி செல்வராஜ் படத்தில் தனுஷ் உடன் முதன் முறையாக இணையும் நடிகர்!


தொடர்ந்து, நடிகை சமந்தா குறித்து என்ன நினைக்கிறீர்கள் என கேள்வியெழுப்பியதற்கு அவர்,"சாமந்தா, நான் சந்தித்த ஒரு ஆளுமை. நான் சந்தித்த மிகவும் வலுவான நெஞ்சம் கொண்ட நபர்களில் அவரும் ஒருவர். எளிமையாகச் சொன்னால், அவரை யாராலும் தடுக்கவே முடியாது!" என பதில் அளித்தார். கீர்த்தியின் இந்த புகழராத்திற்கு சமந்தா அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்,"நன்றி மை டார்லிங்" என்று குறிப்பிட்டுள்ளார்.


கீர்த்தி சுரேஷ், நானியுடன் நடித்து சமீபத்தில் வெளியான தசரா திரைப்படம் பெரும் வசூல் சாதனையை படைத்துள்ளது.   இப்படத்தில் நானி, தீக்ஷித் ஷெட்டி, ஷைன் டாம் சாக்கோ, சமுத்திரக்கனி மற்றும் சாய் குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். இதையடுத்து, இந்த வாரம் வெள்ளிக்கிழமை (ஏப். 14) சமந்தா நடிப்பில் சாகுந்தலம் படமும் வெளியாகி கலவையான விமர்சனங்கலை குவித்து வருகிறது. 



இப்படத்தில் தேவ் மோகன், சச்சின் கெடேகர், கபீர் பேடி, டாக்டர் எம் மோகன் பாபு, பிரகாஷ் ராஜ், மதுபாலா, கவுதமி, அதிதி பாலன், அனன்யா நாகல்லா, ஜிஷு சென்குப்தா ஆகியோரும் நடித்துள்ளனர். மகாபாரதத்தில் வரும் சகுந்தலா மற்றும் மன்னர் துஷ்யந்தின் காதல் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. அந்த கேரக்டரில் நடிக்க தன்னம்பிக்கை இல்லாததால் தான் முதலில் சாகுந்தலம் படத்தை நிராகரித்ததாக சமந்தா சமீபத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | பழைய வீடியோவை பகிர்ந்த பிரியா பவானி ஷங்கர்...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ