ரகு தாத்தா படத்தை நிறைவு செய்த கீர்த்தி சுரேஷ்.. கேக் வெட்டி கொண்டாடம்
அறிமுக இயக்குனர் சுமன்குமார் இயக்கத்தில், நடிகை கீரத்தி சுரேஷ் நடித்துள்ள `ராகுதாத்தா` படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனை கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடினர்.
Raghu Thatha Movie Update: ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான படம் இது என்ன மாயம். விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படத்தில் நடித்ததன் மூலம் கீர்த்தி சுரேஷ் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்தப் படம் ஹிட்டாகவில்லை என்றாலும் கீர்த்தி சுரேஷின் பக்குவமான நடிப்பு பரவலாக பேசப்பட்டது. இதனால் அடுத்தடுத்து தமிழ் பட வாய்ப்புகள் கிடைத்தன. இதன் பின் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான படம் இது என்ன மாயம். விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படத்தில் நடித்ததன் மூலம் கீர்த்தி சுரேஷ் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்தப் படம் ஹிட்டாகவில்லை என்றாலும் கீர்த்தி சுரேஷின் பக்குவமான நடிப்பு பரவலாக பேசப்பட்டது. இதனால் அடுத்தடுத்து தமிழ் பட வாய்ப்புகள் கிடைத்தன.
நடிப்பு என்பது சாதாரணமில்லை. அதிலும் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பது மிகப்பெரிய காரியம். அப்படி நடிக்கும்போது யாரை பற்றிய படமோ அவராகவே மாறி கூடு விட்டு கூடு பாய வேண்டும். அதன்படி மகாநடி படத்தில் கீர்த்தி சுரேஷ் அதனை அசால்ட்டாக செய்தார். நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவான அதில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்து வாயடைத்து போயினர். சாவித்ரியாகவே மாறிவிட்டார் எனவும் பாராட்டு மழை பொழியப்பட்டது. அதுமட்டுமின்றி அந்தப் படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார் கீர்த்தி.
மேலும் படிக்க | கைகுலுக்க வந்த விக்கி-கண்டும் காணாமல் சென்ற சல்மான் கான்-வைரலாகும் வீடியோ..!
அந்தப் படம் கீர்த்தி சுரேஷுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அதனை காப்பாற்றும் வகையில் அதற்கு அடுத்து கதை தேர்வில் கவனமாகவே இருந்துவருகிறார் கீர்த்தி. இடை இடையே கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் பென்குயின், மிஸ் இந்தியா என பெண்களை மையப்படுத்தி வந்த கதையிலும் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் தசரா படத்தில் நடித்திருந்தார். படத்துக்கு கலவையான விமர்சனங்கள்தான் என்றாலும் கீர்த்தியின் நடிப்பு கவனத்தை ஈர்த்தது.
இதனிடையே ‘பேமிலி மேன்’ படத்தின் எழுத்தாளர் சுமன்குமார் இயக்கத்தில் தற்போது நடிகை கீரத்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ரகு தாத்தா’. இந்த படத்தை ‘கேஜிஎப்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அத்துடன் இந்த படத்திற்கு யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவுபெற்றுள்ளது. இதையொட்டி இப்படத்தின் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மேலும் படிக்க | 2ஆவது திருமணம் செய்துகொண்ட ‘கில்லி’ நடிகர்- முன்னாள் மனைவி வெளியிட்ட பரபரப்பு பதிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ