கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியானது. பான் இந்தியா படமாக வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ள இப்படம் உலகளவில் 1000 கோடி ரூபாய்க்கும் வசூலித்து கர்நாடக சினிமாவின் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் படத்தின் ஹீரோவான யாஷும், இயக்குநருமான பிரசாந்த் நீலும் தங்களது கரியரில் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்திருக்கின்றனர்.கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் இறுதி காட்சியில் மூன்றாம் பாகம் வரவிருக்கிறது என்பது கூறப்பட்டிருந்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். 



மேலும், மூன்றாம் பாகத்திற்கான பணிகளும் தொடங்கிவிட்டதென கேஜிஎஃப்பின் இரண்டு பாகங்களை தயாரித்த தயாரிப்பாளரும் கூறியிருந்தார்.


மேலும் படிக்க | ‘புஷ்பா-2’ வின் ஓடிடி ரைட்ஸ் யாருக்கு?- முட்டிமோதும் இரு நிறுவனங்கள்!


இரண்டாம் பாகம் ஹாலிவுட் தரத்தில் இருந்ததால் மூன்றாம் பாகமும் அதேபோல மிக சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். மேலும், பிரசாந்த் நீல் கர்நாடகம் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் படங்களை இயக்க வேண்டுமெனவும் அவர்கள் கூறிவருகின்றனர்.



இதற்கிடையே கேஜிஎஃப் 2 படம் ஓடிடி விற்பனையிலும் சாதனை படைத்ததாக தகவல் வெளியானது. ஆனால் எப்போது எந்த ஓடிடி தளத்தில் வெளியாகுமென்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.


மேலும் படிக்க | ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தைக் கண்டுகளித்த முதலமைச்சர்- வைரல் புகைப்படங்கள்!


இந்நிலையில் கேஜிஎஃப் 2 படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஆனால் படத்தை பார்ப்பதற்கு அமேசான் ப்ரைமில் தனியாக 199 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR