புதுடெல்லி: KGF 1 அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்ட pan-India திரைப்படம். அதன் அடுத்த பாகத்தைப் பார்க்க இந்தியாவே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. திரைப்படம் குறித்த செய்திகள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் வெளியாகி, அனைவரின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்துக் கொண்டிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யஷ், சஞ்சய் தத் மற்றும் ரவீனா டாண்டன் நடிக்கும் KGF 2 திரைப்படத்தின் படபிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. கிளைமாக்ஸ் (climax) காட்சிகள் ஷீட்டிங் ஸ்பாட் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. KGF 2 ஒரு காவியப் படமாக சாதிக்கும் என்று பட்த்தின் இயக்குநர் பிரஷாந்த் நீல் (Prashanth Neel) கருதுகிறார்.


இயக்குனர் பிரசாந்த் நீல் ஒரு முக்கியமான விஷயத்தை தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். அதீராவிற்கும் (Adheera) ராக்கிக்கும் (Rocky) இடையிலான அற்புதமான க்ளைமாக்ஸ் காட்சிகளில் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிலிருந்து ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், "க்ளைமாக்ஸ் இது !!!! ராக்கி அதீராவின் சூப்பர் க்ளைமேக்ஸ்..... # KGFCHAPTER2" என்று குறிப்பிட்டுள்ளார்.  



இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத் வில்லன் ஆதீராவாக (Adheera) நடிக்கிறார். "சஞ்சய் தத் ஒரு அற்புதமான நடிகர், மற்றும் அவரது உடல் தோற்றம், உருவம், திறமை என கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமானவர் சஞ்சய் தத். கே.ஜி.எஃப் அத்தியாயம் 2 கதாபாத்திரத்திற்கு அவரைத் தவிர வேறு யாரும் பொருந்தமாட்டார்கள் என்று அனைவரும் சொல்லும் அளவுக்கு திரைப்படம் வந்திருக்கிறது." என்று சஞ்சய் தத் ஏற்கனவே பாராட்டு மழையில் நனைகிறார்.


இந்த திரைப்படத்தில் அரசியல்வாதியின் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் (Raveena Tandon), சமீபத்தில் தனது கதாபாத்திரம் குறித்த விவரங்களை வெளியிட்டு, “நான் ஒரு அரசியல்வாதியாக, வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். மிகவும் சுவாரஸ்யமான திருப்பங்கள் கொண்ட கதை. திரைப்படத்தின் ஹீரோ மற்றும் படத்தின் வில்லன் என இரு பரிமாணங்களையும் காட்டும் அற்புதமான கதாபாத்திரம், மிகவும் ரசிக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். 


Also Read | KGF 2: டிசம்பர் மத்தியில் முடியும் இறுதிகட்ட படபிடிப்பில் Yash


ஒரு சமீபத்திய அறிக்கையில், யஷ் இவ்வாறு தெரிவித்திருந்தார்: “கேஜிஎஃப் 2 மிகப்பெரியதாக இருக்கும். நீங்கள் கேஜிஎஃப் 1 ஐப் பார்த்திருந்தால், இது எந்த வகையான திரைப்படம் என்பது பற்றி உங்களுக்கு ஒரு யோசனை இருக்கும் - கேஜிஎஃப் 2 கேஜிஎஃப் 1 இன் ஐந்து மடங்காக இருக்கும்! ” படம் இந்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தாலும், கோவிட் -19 இன் தொற்று நெருக்கடி காரணமாக அது தாமதமானது. கே.ஜி.எஃப் இன் இரண்டாம் பகுதி 2021 கோடைக் காலத்தில் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 
zeenews.india.com/tamil/topics/