யஷ் நடிப்பில் கடந்த படம் வெளியான கேஜிஎஃப் 2 படம் உலகளவில் 1000 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்தியில் அதிகம் வசூலித்த தென்னிந்திய படங்கள் வரிசையிலும் இப்படம் முதலிடம் பிடித்துள்ளது. இதனால் நடிகர் யஷ் வசூலில் தான் ஒரு மான்ஸ்டர் என்பதை நிரூபித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையே இந்தியில் கேஜிஎஃப் 2 நடத்திய வசூல் வேட்டையை ஜீரணிக்க முடியாமல்தான் அஜய் தேவ்கன், நவாசுதின் சித்திக் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள் தென்னிந்திய திரைப்படங்கள் குறித்தும், மொழி குறித்தும் சர்ச்சையாக பேசிவருகின்றனர் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.



கேஜிஎஃப்பை சுற்றி ஏராளமான சர்ச்சைகள் நிகழ்ந்தாலும் தற்போது அந்தப் படம் மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | நான் பான் மசாலா ஹீரோ இல்லை பான் இந்தியா ஹீரோ - மாஸ் காட்டிய யஷ்


கேஜிஎஃப் 2 படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஓடிடிக்கு விற்பனை ஆன படங்களில் கேஜிஎஃப் 2தான் அதிக விலைக்கு விற்பனை ஆகியிருப்பதாகவும் தெரிகிறது. இந்தப் படமானது இந்த மாதத்திற்குள்ளேயோ அல்லது அடுத்த மாதத்திலோ ஓடிடியில் வெளியாகும் என்று தகவல் கசிந்துள்ளது.


மேலும் படிக்க | ‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசனுக்கு ஷான்வி ஜோடியானது எப்படி?!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR