கேஜிஎஃப் அத்தியாயம் 3: யாஷ்-சஞ்சய் தத் நடித்த படத்தின் கிரெடிட் காட்சியாக கேஜிஎஃப் 3 ட்ரெண்ட் ஆனது, திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் வெற்றியடைந்துள்ள நிலையில் மூன்றாவது பாகம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை பலரும் உறுதி செய்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

KGF அத்தியாயம் 2 திரைப்படம் வெளியாகி அனைவரின் பாராட்டையும் அள்ளிக் குவித்து வரும் நிலையில் KGF அத்தியாயம் 3 திரைப்படத்திற்கான தயாரிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது போல் தெரிகிறது. 



 


பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் திரைப்படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகியுள்ளன. யஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


மிகவும் எதிர்பார்க்கப்பட்ட KGF அத்தியாயம் 2, திரையரங்குகளில் வெளியிடப்பட்டு பெரும் வெற்றியைப் பெற்றுள்ள நிலையில்,  அதிரடி காட்சிகள், உணர்ச்சிகரமான கதைக்களம் மற்றும் முடிவில்லாத ஸ்வாக் ஆகியவை பார்வையாளர்களை மகிழ்வித்துள்ளது. 




அதே நேரத்தில் KGF அத்தியாயம் 3 ஏற்கனவே தயாரிப்பில் இருப்பது போல் தெரிகிறது. 


 



பம்பாய் சேரியைச் சேர்ந்த ராக்கி, கர்நாடகாவின் கோலார் கோல்ட் ஃபீல்ட்ஸில் (கேஜிஎஃப்) உரிமையாளாக உயர்கிறார். முதல் அத்தியாயத்தில் அவர் வறுமையில் இருந்து செல்வச் செழிப்புக்கு வந்ததை காட்டியது. இரண்டாம் பாகத்தில் KGF தங்கச் சுரங்கத்தின் முடி சூடிய மன்னனாக உயரும் ராக்கியின் பிரம்மாண்டம் அனைவரையும் அசர வைக்கிறது.



இப்போதுதான் இரண்டாம் பாகம் வெளியான நிலையில், இதுவரை யாரும் மூன்றாவது பாகம் பற்றி பேசவில்லை என்பதைவிட, யாரும் எதிர்பார்க்கவில்லை என்றே சொல்லலாம்.


ஆனால் தற்போது மூன்றாம் அத்தியாயமும் வரும் என்ற குறிப்பு அனைவரின் எதிர்பார்ப்புகளையும் எகிற வைத்துள்ளது. 



ஆனால் இப்போதைக்கு, பிரசாந்த் நீல் மற்றும் கேஜிஎஃப் தயாரிப்பு நிறுவனம் மூன்றாம் அத்தியாய தயாரிப்பு பற்றி மூச்சே விடவில்லை.  கேஜிஎஃப் அத்தியாயம் 3 தயாரிக்கப்படுமா, தயாரிப்பாளர்கள் எப்போது செய்தியை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள்?


கேள்விக்கான பதில் இன்னும் சில நாட்களில் வெளியாகும்.  


மேலும் படிக்க | விஜய்யின் டாப்-10 வசூல் படங்கள் இவைதான்!- ‘அந்த’ப் படம் இத்தனை கோடி வசூலா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR