பாகுபலி கலெக்க்ஷனை ரிலீசான முதல் நாளிலேயே முறியடிக்குமா KGF-2
KGF Chapter 2 இந்தி மொழி திரைப்படம், வசூலில் சாதனை செய்த Baahubali 2 இந்தி திரைப்படத்தின் சாதனையை முறியடித்தது. இந்திய அளவில் புதிய ஆல்-டைம் புக்கிங் சாதனையைப் படைத்துள்ள ராக்கிங் ராக்கி
KGF Chapter 2 Box Office Collection: என்டர்டெயின்மென்ட் இண்டஸ்ட்ரி டிராக்கர் ரமேஷ் பாலாவின் கருத்துப்படி, கேஜிஎஃப் அத்தியாயம் 2 இந்தி பாகுபலி 2 ஹிந்தியை முறியடித்து சாதனையை பதிவு செய்துள்ளது.
வசூலில் சாதனை செய்த Baahubali 2 இந்தி திரைப்படத்தின் சாதனையை முறியடித்து ராக்கிங் ஸ்டாராக உருவெடுத்துள்ளார் கேஜிஎஃப் 2 நாயகன் யஷ். இந்திய அளவில் புதிய ஆல்-டைம் புக்கிங் சாதனையைப் படைத்துள்ள ராக்கிங் ராக்கி என்று ரமேஷ் பாலா ட்வீட் செய்துள்ளார்.
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்துள்ள கேஜிஎஃப்-2 திரைப்படம் இன்று வெளியானது. யஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படம் பான் இந்தியா ரிலீஸாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
டிக்கெட் அட்வான்ஸ் புக்கிங்கில் கேஜிஎஃப் புதிய சாதனையை நிகழ்த்தியது. ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் நடிப்பில் அண்மையில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர்.
பாகுபலியின் இரண்டு பாகங்களும் அடைந்த பிரமாண்ட வெற்றிக்கு மத்தியில் கேஜிஎஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். அந்த நான்காண்டு காத்திருப்பு இன்றுடன் முடிவுக்கு வந்தது.
அதுமட்டுமல்ல, ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ரிலீசுக்கு முந்தைய ஒட்டுமொத்த அட்வான்ஸ் புக்கிங் விற்பனையை கேஜிஎஃப்-2 திரைப்படம் வெறும் இரண்டே நாட்களில் முறியடித்தது.
மேலும் படிக்க | Beast Vs KGF2: ரிலீசுக்கு முன்பே ‘கே.ஜி.எஃப்-2’வை வென்ற பீஸ்ட்!
பிரசாந்த் நீல் இயக்கிய இந்த திரைப்படம் "கேஜிஎஃப்" திரைப்படத்தின் தொடர்ச்சியாகும், 2018 இல் வெளியாகி நாடு முழுவதும் வெற்றியடைந்த கேஜிஎஃப் படத்திற்காக பலரும் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்தனர்.
கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இன்று இந்தியா முழுவதும் வெளியான ‘கேஜிஎஃப்: அத்தியாயம் 2’ திரைப்படத்தை இயக்குநர் பிரசாந்த் நீல் எழுதி இயக்கியுள்ளார்.
ஹோம்பேல் பிலிம்ஸ் பேனரின் கீழ் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ள கேஜிஎஃப் திரைப்படம், பல சாதனைகளை முறியடிக்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே இந்த ஆண்டு 2022ம் ஆண்டில் வெளியாகும் திரைப்படங்களில் எது வசூலில் முந்தும் என்பது அனைவருக்கும் த்ரில்லான கேள்வியாக உள்ளது.
மேலும் படிக்க | பீஸ்ட்'டுக்கு முன்பாக திடீரென வெளியான KGF: ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR