அடுத்த ஆண்டிற்கு செல்லும் கே.ஜி.எப் 2..! காரணம் இதுதான்!
இந்தியா மட்டுமின்றி உலக அளவில் உள்ள ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படமான கே.ஜி.எப் 2 அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு வெளிவந்த கன்னட படமான கேஜிஎப் (KGF)படம், பான் இந்தியா திரைப்படமாக அனைத்து மொழிகளிலும் வெளியானது. தமிழில் வெளியான கேஜிஎப் திரைப்படம் முதல்வாரத்தில் மக்களிடம் சரியாக சென்றடையாமல் இருந்தது. அதன்பின் அடுத்தடுத்த வாரங்களில் இப்படம் திரையரங்கில் நல்ல வசூலை அள்ளி தந்தது. எனினும் தொலைக்காட்சி மற்றும் இணையத்தில் வெளியான பின்பு இப்படம் பற்றிய பேச்சு அனைத்து இடங்களிலும் பரவலாக இருந்தது. அதிலும் குறிப்பாக இப்படத்தின் ஹீரோ யாஷ் பேசும் வசனம் தமிழில் பிரபலமாகியது. 'எட்டு ஷூவுக்கு பாலீஷ் போட்டால் தான் ஒரு பன் கிடைக்கும்' என்ற வசனம் அனைத்து இடங்களிலும் பிரபலமடைந்தது.
மாஸ் கமர்சியல் படமாக உருவாகியிருந்த கேஜிஎப் படத்தில் அம்மா ' மகன் பாசத்தை சொல்லும் கதையாகும் கொண்டு செல்லப்பட்டது. முதல் பாகம் வெளிவந்து வெற்றி அடைந்ததை அடுத்து கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பு மிகப்பெரியதாக உள்ளது. தமிழில் இப்படத்தை எஸ்.ஆர் பிரபு வெளியிடுகிறார். சமீபத்தில் யாசின் பிறந்தநாளுக்கு இப்படத்தின் டீசர் வெளியாகி பல சாதனைகளை புரிந்துள்ளது. 200 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கொண்டு யூடியூபில் கேஜிஎப் 2 டீசர் சாதனை படைத்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கேஜிஎப் 2 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போனது. இந்த வருடம் டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிட திட்டமிட்டு நிலையில் ஒரே அடியாக அடுத்த வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடலாம் என்று அப்படக்குழு முடிவெடுத்துள்ளது. சமீபத்தில் இப்படத்தை ஓடிடியில் நேரடியாக வெளியிட மிகப் பெரிய தொகை பேசபட்டதாகவும் அதற்கு படக்குழு சம்மதிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியானது.
கேஜிஎப் 2 படத்தை இப்போது பார்க்க முடியாது என்று ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தாலும், கொண்டாட்டத்துடன் திரையரங்கில் பார்க்கலாம் என்று காத்துக்கொண்டிருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe