பாலிவுட் படத்தை பதம்பார்த்த ராக்கிபாய் - வசூல் சாம்ராஜ்ஜியம்
தமிழில் பீஸ்ட் படத்தை பதம்பார்த்த ராக்கி பாய், பாலிவுட்டில் ஜெர்சி படத்தின் வசூலையும் குறைத்துள்ளார்
யாஷ் நடிப்பில் ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் கேஜிஎப் 2. மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் வசூல் சாம்ராஜ்ஜியத்தை அமைத்தது. இளைய தளபதி பீஸ்ட் திரைப்படம் ரிலீஸான பிறகு, அடுத்த நாள் கேஜிஎப் 2 ரிலீஸானது. வசூல் பாதிப்பை பற்றியெல்லாம் கவலைப்படாமல், தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்தது படக்குழு.
மேலும் படிக்க | KGF-2 படத்தால் நின்றுபோன புஷ்பா-2: காரணம் தெரிஞ்சா ‘ஷாக்’ ஆகிடுவீங்க!
பீஸ்ட் படம் வருகிறது என தெரிந்தும் அவர்கள் ரிலீஸ் செய்வதில் உறுதியாக இருந்தார்கள் என்றால், அப்போதே பீஸ்ட் குழு சுதாரித்திருக்க வேண்டும். ஆனால், வசூல் பற்றி கவலைப்படாமல் ரிலீஸ் செய்யப்பட்ட பீஸ்ட், கேஜிஎப் ரிலீஸான பிறகு அடிவாங்கியது. கேஜிஎப் 2 தமிழ் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இத்தனைக்கும் மெயின் ஸ்கிரீன்களின் பீஸ்ட் ஓடிக் கொண்டிருக்கும்போது, மற்ற ஸ்கிரீன்களின் மட்டுமே கேஜிஎப் 2 திரையிடப்படுகிறது.
ஆனால், கேஜிஎப் 2 படத்தை தேடிச் சென்றும் பார்க்கும் ரசிகர்கள், பீஸ்ட் படத்தை திரும்பி பார்க்க கூட தயங்குகின்றனர். இதனால் முதல் வாரத்தில் வசூலில் முதல் இடத்தில் இருந்த பீஸ்ட் திரைப்படத்தை, இரண்டாவது வாரத்தில் கேஜிஎப் 2 நெருங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தமிழில் பீஸ்ட்-ஐ பதம்பார்த்த நிலையில், பாலிவுட்டில் ஜெர்சி திரைப்படத்தின் வசூலுக்கு என்டு கார்டு போட்டுள்ளது. கேஜிஎப் 2 ரிலீஸின்போது வெளியிடப்பட இருந்த ஜெர்சி, ஒருவாரத்துக்குப் பிறகு ரிலீஸ் செய்யப்பட்டது. இருந்தபோதும், 10 நாட்களைக் கடந்து கேஜிஎப் வசூலை வாரிக் குவித்து வருகிறது. 350 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருக்கும் கேஜிஎப் 2 வசூலுக்கு இதுவரை யாராலும் அணைபோடமுடியவில்லை.
மேலும் படிக்க | கமல்- சூர்யாவை இணைக்கும் விக்ரம்- புதிய அப்டேட்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR