கிச்சா சுதீப்பின் MAX படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!
Max review: அறிமுக இயக்குனர் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் கிச்சா சுதீப் நடித்துள்ள மேக்ஸ் படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
கன்னடத்தில் மாஸ் நடிகரான கிச்சா சுதீப் நடிப்பில் அறிமுக இயக்குனர் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் மேக்ஸ் (MAX). கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி கன்னட மொழியில் வெளியாகி உள்ளது மேக்ஸ் படம். டிசம்பர் 27 முதல் தமிழ், ஹிந்தி மற்றும் மலையாளத்தில் வெளியாக உள்ளது. வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணு மற்றும் கிச்சா கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து மேக்ஸ் படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தில் கிச்சா சுதீப், வரலக்ஷ்மி சரத்குமார், சம்யுக்தா ஹார்னாட், பிரமோத் ஷெட்டி, சுனில் மற்றும் பலர் நடித்துள்ளனர். ட்ரைலர் பார்க்கும் போதே அதிரடி மாஸ் கமர்சியல் படமாக தெரிந்தது.
மேலும் படிக்க | ஓடிடியில் பார்க்க வேண்டிய 7 ராஜா கால தொடர்கள்! எந்த தளத்தில் பார்ப்பது?
இந்த படத்தில் அர்ஜுன் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் கிச்சா சுதீப் நடித்துள்ளார். ஒரு சஸ்பென்ஷனுக்கு பிறகு மீண்டும் பணியில் சேர வருகிறார். அடுத்த நாள் காலை பணியில் சேர உள்ள நிலையில், முதல் நாள் இரவே இரண்டு அமைச்சர்களின் மகன்களை கைது செய்து காவல் நிலையத்தில் வைக்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த இருவரும் இறந்துவிட காவல் நிலையில் உள்ள மற்ற காவலர்கள் பயப்படுகின்றனர். அமைச்சரின் மகன்களை தேடி பல ரவுடி கும்பல்கள் காவல் நிலையத்தை சுற்றி வளைக்கின்றனர். இறுதியில் காவல் நிலையத்தில் இருந்து பணியில் இருந்த காவலர்கள் தப்பித்தார்களா? தங்களை பாதுகாத்துக் கொள்ள என்ன மாதிரியான வேலைகளை அவர்கள் செய்தார்கள்? கிச்சா சுதீப் அவர்களை எப்படி காப்பாற்றுகிறார்? என்பதே மேக்ஸ் படத்தின் கதை.
தனது முதல் படத்திலேயே இயக்குனர் விஜய் கார்த்திகேயா ஒரு மாஸ் கமர்சியல் படத்தை கொடுத்துள்ளார். கைதி படம் போன்ற ஒரே இரவில் நடக்கும் கதையை சுவாரசியமாக ஆரம்பம் முதல் இதுவரை கொண்டு சென்றுள்ளார். கிச்சா சுதீப்பின் ஸ்கிரீன் பிரசன்ஸ் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. அதிரடி காட்சிகளிலும், வசனங்களிலும் அனல் பறக்க நடித்துள்ளார் கிச்சா சுதீப். இயக்குனர் விஜய் கார்த்திகேயா மற்றும் கிச்சா சுதீப்பின் அசத்தலான வேலைகளால் படத்தில் உள்ள பெரும்பாலான ஓட்டைகள் தெரியவில்லை. தனது மாஸான நடிப்பின் மூலம் வெகுஜன ரசிகர்களையும் எளிதாக கவர்ந்து விடுகிறார் கிச்சா சுதீப். ஒவ்வொரு முறையும் ஒரு பிரச்சினை வரும்போது அதனை அவர் கையாளும் விதம் சிறப்பாகவே உள்ளது.
கிச்சா சுதீப்பை தாண்டி வரலக்ஷ்மி சரத்குமார், சம்யுக்தா ஹார்னாட், பிரமோத் ஷெட்டி, சுனில் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அவர்களின் கதாபாத்திரமும் சிறப்பாக எழுதப்பட்டு இருந்தது. இவர்கள் அனைவரும் வெறுமனே ஒரு கதாபாத்திரமாக மட்டும் இல்லாமல் கதையிலும் முக்கியத்துவம் உள்ளதால் திரைக்கதைக்கு பெரிதும் உதவுகிறது. குறிப்பாக முதல் பாதியில் வரலட்சுமி முதல் முறையாக போலீஸ் ஸ்டேஷனில் வரும் காட்சி மற்றும் பஞ்சர் கடையில் நடக்கும் காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டு இருந்தது.
அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. The Lion’s Roar மற்றும் Maximum Mass போன்ற பாடல்கள் அதிரடியாக இருந்தது. படத்தின் பெரும் பகுதி செட்டிற்குள் நடைபெற்றாலும் ஆர்டர் டைரக்டர் சிவ குமார் சிறப்பான பணியை மேற்கொண்டுள்ளார். இது படத்தின் பிரம்மாண்டத்தை உயர்த்துகிறது. கிச்சா சுதீப்பின் நட்சத்திர அந்தஸ்தை மேக்ஸ் படம் தூக்கி நிறுத்தியுள்ளது. கூர்மையான திரைக்கதை மற்றும் விறுவிறுப்பான காட்சிகள் படத்தை ரசிக்கும்படி மாற்றுகிறது. மாஸ் கமர்சியல் படம் பிடிக்கும் என்றால் நிச்சயம் மேக்ஸ் உங்களை கவரும்.
மேலும் படிக்க | ஓடிடியில் ஒரே நாளில் வெளியாகும் 22 திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ