ஓடிடியில் பார்க்க வேண்டிய 7 ராஜா கால தொடர்கள்! எந்த தளத்தில் பார்ப்பது?

Period Dramas On Netflix : நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 7 பீரியட் டிராமாக்கள். இதை பார்த்தால் கண்டிப்பா பிடிக்கும், என்னென்ன தெரியுமா?

Period Dramas On Netflix : ராஜா கால ஹாலிவுட் தொடர்களுக்கு நம் ஊரில் பல ஆயிரம் ரசிகர்கள் இருக்கின்றனர். குறிப்பாக, ராஜ கால தொடர்களுடன் காதல்-காமெடியும் இடம் பெற்றிருந்தால்? அப்படி ஓடிடியில் வெளியாகியிருக்கும் தொடர்கள் பல இந்தியாவில் பெரிய ஹிட் அடித்திருக்கின்றன. அவை என்னென்ன தொடர்கள்? இங்கு பார்ப்போம். 

1 /8

வைக்கிங்ஸ்: வரலாற்று தொடராக உருவானது வைக்கிங்க்ஸ். இதில் மொத்தம் 3 சீசன்கள் உள்ளன. இவற்றை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம். 

2 /8

தி எம்ப்ரஸ்: IMDB-ல் 10க்கு 7.8 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருக்கும் தொடர், தி எம்ப்ரஸ். காதல் கதையான இது, கண்டிப்பாக வரலாறு பிடித்தவர்களை மகிழ்விக்கும். இதனை நெட்ஃப்ளிஸ் தளத்தில் பார்க்கலாம்.

3 /8

தி க்ரவுன்: இந்த தொடருக்கு IMDB-ல் 10க்கு 8.6 ஸ்டார் ரேட்டிங் கொடுக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து மன்னரை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த தொடர் பலரை கவர்ந்திருக்கிறது. இதில் மொத்தம் 6 சீசன்கள் உள்ளன. அனைத்தையும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம். 

4 /8

குயின் சார்லேட்: பிரிட்ஜர்டன் தொடரின் ஸ்பின் ஆஃப் (தனி) கதையாக உருவானது, குயின் சார்லேட். இதில் ஜார்ஜ் மற்றும் சார்லெட்டிற்கு இடையே இருக்கும் காதலும் அவர்கள் ஆட்சி புரிய ஆரம்பித்தது எப்படி என்பது குறித்தும் காண்பிக்கப்பட்டிருக்கும். இந்த தொடரை நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம். 

5 /8

பீக்கி ப்ளைண்டர்ஸ்: சில்லியன் மர்ஃபியை இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்திய தொடர், பீக்கி ப்ளைண்டர்ஸ். இந்த தொடரில் மொத்தம் 6 சீசன்கள் உள்ளன. இவற்றை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம். 

6 /8

அவுட் லேண்டர்: இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நகர்வது போல எடுக்கப்பட்டிருக்கும் கதை இது. இதில் மொத்தம் 7 சீசன்கள் உள்ளன. இவற்றை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம். 

7 /8

பிரிட்ஜர்டன்: சில நாட்களுக்கு முன்னர் ட்ரெண்டிங்கில் இருந்த தொடர், பிரிட்ஜர்டன். இதில் மொத்தம் 3 சீசன்கள் வெளியானது. பிரிட்ஜர்டன் குடும்பத்தில் இருக்கும் பிள்ளைகள் ஒவ்வொருவரின் காதல் கதையும் ஒவ்வொரு சீசனாக வெளியாகி வருகிறது. இந்த தொடரையும் நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம். 

8 /8

ஆன் வித் அன் ஈ: 19வது நூற்றாண்டில் நடப்பது போல எடுக்கப்பட்டிருந்த தொடர், Anne With An E. ஒரு அனாதை பெண்ணின் கதையான இது பலரை கவர்ந்தது. இந்த தொடர் மொத்தம் 3 சீசன்களை கொண்டிருக்கிறது. இதனை நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம்.