மலையாள மொழியில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம்‘கிங் ஆஃப் கோதா’இந்த படத்தினை அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேர் ஃபிலிம்ஸ் இணைந்து கிங் ஆஃப் கோதா படத்தினை தயாரித்துள்ளது. இதில் துல்கர் சல்மானுடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி, பிரசன்னா, கோகுல் சுரேஷ் உள்ளிட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து படம் இன்று வெளியாகியுள்ளது. இதர்கு ரசிகர்கள் தங்களது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனங்களை கொடுத்த வண்ணம் உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிவிட்டர் விமர்சனம்..


கிங் ஆஃப் கோதா படத்திற்கு ஒரு ரசிகர், தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம் கொடுத்துள்ளார். அதில், “வில்லன்-ஹீரோவிற்கு இடையே பெரிய சண்டை காட்சி இல்லாதது படத்தின் குறை என்று குறிப்பிட்டுள்ளார்” 



கிங் ஆஃப் கோதா படத்தின் கதை நேர்த்திக்கு மரியாதை கொடுப்பதாக அந்த ரசிகர் அதில் குறிப்பிட்டுள்ளார். 


மேலும் படிக்க | சந்திரயான்-3 பட்ஜெட் இவ்வளவு தானா... ஆதிபுருஷ் படத்தை வம்பிழுக்கும் ரசிகர்கள்!


‘ஒன் மேன் ஷோ’


துல்கர் சல்மான் ஒன் மேன் ஷோவாக படத்தை நகர்த்திக்கொண்டு போவதாக ஒரு ரசிகர் குறிப்பிட்டுள்ளார். 



படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள், நடிகர்களின் தேர்வு, ஒளிப்பதி மற்றும் சிஜி காட்சிகள் அனைத்தும் அருமையாக இருப்பதாகவும் அந்த ரசிகர் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் காமெடி காட்சிகள் கொஞ்சம் டல்லாக இருந்ததாகவும் ஆங்காங்கே லாஜிக் இடித்ததாகவும் அந்த ரசிகர் குறிப்பிட்டுள்ளார். 


“ஆக்‌ஷன் காட்சிகள் அருமை”


கிங் ஆஃப் கோதா படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்களால் புகழப்பட்டு வருகிறது. 



ராஜு கதாப்பாத்திரத்தில் துல்கர் சல்மான் அதகளம் கிளப்பியுள்ளதாகவும் பவர்ஃபுளான ஆக்‌ஷன் காட்சிகள் படத்தில் உள்ளதாகவும் ஒரு ரசிகர் குறிப்பிட்டுள்ளார். 


“ப்ளாக் பஸ்டர்”


கிங் ஆஃப் கோதா படத்தை பல தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. அதில் சிலர் படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் என்று டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர். 



ஒரு ரசிகர் ‘ப்ளாக் பஸ்டர்’ என்ற ஒரு வரி விமரசனத்தை கொடுத்துள்ளார். 


குறைகளும் நிறைகளும்..


படங்களுக்கு விமர்சனம் கொடுக்கும் டிவிட்டர் பக்கம் ஒன்று கிங் ஆஃப் கோதா படத்திற்கு விமர்சனத்தை அளித்துள்ளது. அதில், படத்தின் நிறைகளையும் குறைகளையும் அந்த டிவிட்டர் பக்கம் குறிப்பிட்டுள்ளது. 



நிறைகள்:


பின்னணி இசை, நாயகன் துல்கர் சல்மான், ஒளிப்பதிவு ஆகியவை படத்தின் நிறைகள் என அந்த டிவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


குறைகள்:


அரைத்த மாவையே அரைத்தது போன்ற திரைக்கதை, படத்தின் நீளம் ஆகியவை கிங் ஆஃப் கோதா படத்தின் குறைகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | தேசிய விருதுக்கு தேர்வாகியிருக்கும் தமிழ் படங்கள்..! முழு லிஸ்ட் இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ