சந்திரயான்-3 பட்ஜெட் இவ்வளவு தானா... ஆதிபுருஷ் படத்தை வம்பிழுக்கும் ரசிகர்கள்!

High Budget Movies Than Chandrayaan-3: இஸ்ரோ நிறுவனத்தின் சந்திரயான்-3 விண்கலத்தின் பட்ஜெட்டை விட பல ஹாலிவுட், பாலிவுட் படங்கள் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Aug 24, 2023, 09:33 AM IST
  • சந்திரயான்-3 இன் பட்ஜெட் ரூ. 615 கோடி
  • ஆனால், ஆதிபுருஷ் திரைப்படத்தின் பட்ஜெட் ரூ. 700 கோடியாக உள்ளது.
  • சந்திரயான்-2 விண்கலத்திற்கு ரூ. 978 கோடி செலவிடப்பட்டது.
சந்திரயான்-3 பட்ஜெட் இவ்வளவு தானா... ஆதிபுருஷ் படத்தை வம்பிழுக்கும் ரசிகர்கள்! title=

High Budget Movies Than Chandrayaan-3: சந்திரயான்-3 என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) சந்திரனில் ஆராய்ச்சி பணியை மேற்கொள்ள அனுப்பப்பட்ட மூன்றாவது செயற்கை கோளாகும். கடந்த ஜூலை 14ஆம் தேதி அன்று, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள புகழ்பெற்ற சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

அப்போதிருந்து, சந்திரயான்-3 மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் நேற்று மெதுவாக தரையிறங்கியது, இந்த சாதனையை எட்டிய நான்காவது நாடாக இந்தியாவை உருவெடுத்துள்ளது. முன்னதாக, அமெரிக்க, சோவியட் யூனியன், சீனா ஆகிய நாடுகளே நிலவில் கால் தடம் பதித்திருந்தனர்.

சந்திரயான-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து நிலவில் நேற்று இறங்கிய பிரக்யான் ரோவர் பூமியின் 14 நாட்களுக்குச் சமமான ஒரு சந்திர நாளுக்கு அங்கு செயலில் இருக்க உள்ளது. அதன் மூலம், அங்கு பல்வேறு ஆய்வு பணிகள் நடைபெற உள்ளது. 

சந்திரயான்-3 பட்ஜெட் எவ்வளவு?

இருப்பினும், சந்திரயான்-3 விண்கலத்தை உலகமே திரும்பி பார்க்க முக்கிய காரணம், இந்த பணிக்காக இந்தியா வெறும் ரூ. 615 கோடி மட்டுமே செலவிட்டுள்ளது. சந்திரயான்-2 விண்கலத்தின் பட்ஜெட்டை நாம் பார்க்கும்பட்சத்தில், இது மிகப்பெரிய செலவுக் குறைப்பாகும். அதாவது, இஸ்ரோ சந்திரயான்-2 விண்கலத்திற்கு ரூ. 978 கோடி செலவழித்தது, சந்திரயான்-2 தோல்வியை தழுவியது. 

மேலும் படிக்க | பீட்ஸா 3 to பேபி..ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் படங்கள்..! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்..?

லேண்டருக்கும் பூமியில் உள்ள பணிக் கட்டுப்பாட்டு மையத்திற்கும் இடையிலான தகவல்தொடர்புகளில் ஏற்பட்ட மென்பொருள் கோளாறு காரணமாக சந்திரயான்-2 விண்கலம் தோல்வியடைந்தது. சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை சந்திரனில் விபத்துக்குள்ளானது, அது உண்மையில் உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் இதயத்தை சுக்குநூறாக்கிய நாளாக இருந்தது (செப். 7, 2019). இருப்பினும், சந்திரயான்-2வில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டு, செலவையும் கட்டுப்படுத்தி இப்போதும் பெரும் சாதனையை சந்திரயான்-3 படைத்திருக்கிறது.

இஸ்ரோ தங்கள் நிலவு பயணமான சந்திரயான்-3 இன் மொத்த பட்ஜெட் ரூ. 615 கோடி (75 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) என அதிகாரப்பூர்வமாக அறிவித்தபோது, இணையம் மட்டுமின்றி உலகமே வாயடைத்துப்போனது. ஹாலிவுட், பாலிவுட்டில் நட்சத்திரங்கள் அடங்கிய படங்களின் சராசரி பட்ஜெட்டை விட இது குறைவாக இருந்ததே உலகளாவிய பாராட்டுக்குக் காரணம். 

ஹை பட்ஜெட் ஹாலிவுட் திரைப்படங்கள்

சந்திரயான்-3 விண்கலத்தின் பட்ஜெட்டை விட அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட சில புகழ்பெற்ற படங்கள் இருக்கின்றன. அவதார் 2 (350 மில்லியன் அமெரிக்க டாலர்), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (325 மில்லியன் அமெரிக்க டாலர்), ஸ்டார் வார்ஸ் : தி ரைஸ் ஆஃப் ஸ்கைவால்கர் (275 மில்லியன் அமெரிக்க டாலர்), ஜான் கார்ட்டர் (264 மில்லியன் அமெரிக்க டாலர்) ஆகியவை ஹாலிவுட்டில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. ஹாலிவுட்டில், தயாரிப்பாளர்கள் ஒரு திரைப்படத்தை தயாரிக்கும் தொகையில் இரண்டு அல்லது மூன்று மடங்கு பணத்தை தான் சந்திரயான்-3 விண்கலத்திற்கு இஸ்ரோ செலவிட்டுள்ளது. 

ஹாலிவுட்டை விடுங்கள் பாலிவுட்டிலும் இதே தான் நிலைமை. இந்திய சினிமாவின் உள்ளடக்கம் வளர்ந்து வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், தேவையற்றதாக தோன்றும் திரைப்படங்களுக்கு தயாரிப்பாளர்கள் பெரும் தொகையை வாரி இறைப்பதை நாம் மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறோம் என்பதும் கசப்பான உண்மை. 

ஆதிபுருஷ் ட்ரால் 

உதாரணமாக, புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரான ஓம் ரவுத், ரூ. 500 முதல் ரூ. 700 கோடி பட்ஜெட்டில் ஆதிபுருஷ் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. தற்போது, ஆதிபுருஷ் படம் இணையத்தில் பெரும் நகைப்புக்கு உள்ளாகி வரும். சந்திரயான்-3 இன் பட்ஜெட்டை தாண்டாவிட்டால், மிக அருகில் வந்த சில இந்திய படங்கள் ஆர்ஆர்ஆர் (ரூ. 550 கோடி), 2.0 (ரூ. 600 கோடி), பொன்னியின் செல்வன் (ரூ. 500 கோடி), பிரம்மாஸ்திரா (ரூ. 400 கோடி), சாஹோ (ரூ. 350 கோடிகள்), மற்றும் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

சமீபத்தில், ட்விட்டரில் (இப்போது X) ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் கனவுத் திரைப்படமான இன்டஸ்டெல்லார் படத்தின் பட்ஜெட்டை விட இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்தின் பட்ஜெட் மிக மிக குறைவு என பதிவு ஒன்றை பதிவிடப்பட்டிருந்தது. அதை பகிர்ந்த, X நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க்,"இந்தியாவிற்கு நல்லது" என பதிவிட்டிருந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது. 

மேலும் படிக்க | “ரஜினிக்கே 6 படங்கள் தோல்விதான்..” சர்ச்சையில் மாட்டிக்கொண்ட விஜய் தேவரகொண்டா..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News