கோலிவுட் சினிமாவில் இருக்கும் நடிகைகள் பலர் சிறந்த நடிகைகளாக மட்டுமன்றி சிறந்த படிப்பாளிகளாகவும் இருக்கின்றனர். இவர்களை திரையில் மட்டுமே பார்க்கும் நாம், அவ்வப்போது “நடிகையாக மாறாவிட்டால் இவர்கள் எந்த வேலைக்கு சென்றிருப்பார்கள்..?” என்று யோசிப்பதுண்டு. ஏன், அவர்களே அப்படி யோசித்ததால்தான் டிகிரி வரை படித்துள்ளனர். இவர்களில் சிலர், நாம் நினைத்து கூட பார்க்காத பட்டப்படிப்பை கையில் வைத்துள்ளனர். இதில் அதிகம் படித்துள்ள நாயகிகள் யார்? எந்தெந்த நாயகிகள் எதுவரை படித்துள்ளனர்? இதோ முழு விவரம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

த்ரிஷா:


தென்னிந்தியாவின் அழகு ராணி என்று அழைக்கப்படும் நாயகி, த்ரிஷா. கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஆட்சி செய்து வரும் நாயகிகளுள் இவரும் ஒருவர். இவர் நடிப்பில் தற்போது ‘தி ரோட்’ திரைப்படம் வெளியானது. வரும் 19ஆம் தேதி லியோ படம் வெளியாகிறது. இதில் இவர் நாயகியாக நடித்துள்ளார். த்ரிஷா, மாடலிங் துறை மூலம் திரையுலகிற்கு வந்தார். இவர், சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் பிபிஏ (Bachelor of Business Administration) பட்டப்படிப்பு படித்துள்ளார். 


நயன்தாரா:


ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர், நயன்தாரா. 2005ஆம் ஆண்டு ஐயா படம் மூலம் அறிமுகமான இவர், தற்போது பாலிவுட் வரை சென்று விட்டார். நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம், வசூலில் 1000 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது. இவர் நடிப்பதற்கு முன்னர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தார். கேரளாவில் படித்து வளர்ந்த இவர், ஆங்கில லிட்டரெச்சர் (English Literature) வரை படித்துள்ளார். 


மேலும் படிக்க | கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள்..லிஸ்டில் யார் டாப் தெரியுமா?


சமந்தா:


தென்னிந்தியாவில் அதிகம் தேடப்படும் கதாநாயகியாக இருப்பவர், சமந்தா. தமிழில் மாஸ்கோவின் காவிரி படம் மூலம் அறிமுகமானார். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் இவரும் ஒருவர். பாலிவுட்டில் சிட்டடெல் என்ற தொடரிலும் சமந்தா நடித்துள்ளார். ஆங்கிலத்தில் உருவாகியுள்ள சென்னை ஸ்டோரி என்ற படத்திலும் நடித்திருக்கிறார். சமந்தாவிற்கென்று தமிழகத்தில் பெரிய ஆர்மியே உள்ளது. சென்னையில் உள்ள பல்லாவரத்தில் வளர்ந்த பெண் இவர். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் இவர் இளங்களை பட்டப்படிப்பு படித்துள்ளார். 



ராஷ்மிகா மந்தனா:


தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், ராஷ்மிகா மந்தனா. கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து வாரிசு படத்தில் விஜய்யுடன் நடித்திருந்தார். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் சைக்காலஜி, ஜர்னலிசம் மற்று இங்க்லீஷ் லிட்டரெச்சர் பட்டப்படிப்பு படித்துள்ளார். 


ஐஸ்வர்யா ராஜேஷ்:


அட்டகத்தி படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர், ஐஸ்வர்யா ராஜேஷ். இவருக்கு ‘காக்கா முட்டை’ திரைப்படம் நல்ல பெயரை பெற்றுத்தந்தது. தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் கதாநாயகிகளுள் இவரும் ஒருவர். இவர், எத்திராஜ் கல்லூரியில் பி.காம் படித்துள்ளார். 


நித்யா மேனன்:


மலையாள நாயகியாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட நாயகி, நித்யா மேனன். இவர், தமிழில் ‘நூற்றென்பது’ எனும் படம் மூலம் அறிமுகமானார். விஜய், சூர்யா, துல்கர் சல்மான், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். இவர், பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் ஜர்னலிஸம் படித்துள்ளார்.


சாய் பல்லவி:


மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படம் மூலம் அறிமுகமான நாயகி, சாய் பல்லவி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மாெழி படங்களிலும் நடித்துள்ளார். பாலிவுட்டில் உருவாகும் ராமாயண கதையில் சீதையாக நடித்து இந்தி திரையுலகிற்குள் இவர் எண்ட்ரி காெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர், ஜார்ஜியாவில் உள்ள ஒரு பிரபல மருத்துவ பல்கலை கழகத்தில் மருத்துவ பட்டப்படிப்பு படித்துள்ளார். தென்னிந்திய திரையுலகை சேர்ந்த நாயகிகளிலேயே அதிகம் படித்தவர் இவர்தான் எனக்கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | தலைவர் 170 படத்தில் இரண்டு இளம் நாயகிகள்..! ரஜினிக்கு ஜோடி யார் தெரியுமா..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ