‘குப்பத்து ராஜா’-வின் பர்ஸ்ட் லுக் வெளியானது!
குப்பத்து ராஜா-வின் பர்ஸ்ட் லுக்-னை நேற்று நடிகர் தனுஷ் வெளியிட்டார்!
நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் உருவாகும் திரைப்படம் ‘குப்பத்து ராஜா’.இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் பாலக் லால்வானி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இயக்குனர் பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.
அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் கதையாக படம் உருவாகி வருகின்றது. இப்படத்திற்காக தனி செட் அமைத்து படமாக்கப்பட்டு வருகின்றது!
இந்நிலையில் இப்படத்தின் ’பர்ஸ்ட் லுக்’-னை நேற்று வெளியானது. இந்த பர்ஸ்ட் லுக்-கை நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.