தெலுங்கு திரையுலகில் சமீப காலமாக பையோபிக் திரைப்படங்கள் வெளியாவது வழக்கமாகி வருகின்றது. அந்த வகையில் கடந்த வருடம் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை படமான நடிகையர் திலகம், அதனை தொடர்ந்து ஆந்திராவின் முன்னாள் முதல்வர் YRS ரெட்டியின் வாழ்கை படமான யாத்ரா, NTR அவர்களின் வாழ்க்கை படமான NTR கதாநாயகடு ஆகியவை  வெளியானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படங்களில் சாவித்திரியின் வாழ்க்கை படம் பெரும் வெற்றி பெற்றது, NTR அவர்களின் வாழ்க்கை படமான NTR கதாநாயகடு எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை., அதேப்போல் YRS ரெட்டியின் வாழ்கை படமான யாத்ரா ஓரளவிற்கு தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை தருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


முன்னதாக NTR கதாநாயகடு திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் (NTR மகாநாயகடு) வரும் பிப்., 22-ஆம் நாள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இதற்கிடையில் இப்படத்திற்கு போட்டியாக பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா ‘லட்சுமியின் NTR’ என்னும் படத்தை உருவாக்கியுள்ளார். இவ்விரண்டு திரைப்படங்களும் ஒரு சேர வெளியாக வாய்ப்புகள் உள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனது சர்சையான கருத்துகளாலும், திரைப்படங்களாலும் தொடர்ந்து எதிர்ப்புகளை பெற்று வரும் ராம் கோபால் வர்மாவிற்கு இந்த விஷயத்திலும் எதிர்ப்பு குரல் எதிரே எழுந்துள்ளது.


காரணம், அவரது லட்சுமியின் NTR திரைப்படத்தின் ட்ரைலர் காதலர் தினமான நேற்று வெளியானது, இந்த ட்ரைலர் மூலம் NTR வாழ்க்கையின் மற்றொரு பாகம் காண்பிக்கப்பட்டுள்ளது. மேலும் லட்சுமி பார்வதியை NTR மணந்த பின்னர் அவர் தனது குடும்பத்தில் சந்தித்த பிரச்சனைகளை குறித்து இத்திரைப்படம் சித்தரித்துள்ளது. மேலும், ட்ரைலரில் NTR-ன் மருமகனும், தற்போதைய ஆந்திரா முதல்வருமான சந்திரபாபு நாயுடு வில்லனாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரத்தால் ராம் கோபால் வர்மாவிற்கு எதிராக மீண்டும் எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளது.