Lal Salaam Box Office Collections: ‘லால் சலாம்’ படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவுன்னு தெரியுமா?
Lal Salaam Box Office Collections : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் திரைப்படத்தின் மூன்று நாள் வசூல் நிலவரம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
Rajinikanth Lal Salaam Box Office Collection Day 3: பொங்கலுக்கு ரிலீஸாகவிருந்த லால் சலாம், கடந்த வாரம் திரைக்கு வந்தது. இந்நிலையில், லால் சலாம் படத்தின் மூன்றாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
லால் சலாம் திரைப்படம்:
ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) கேமியோ ராேலில் நடித்துள்ள திரைப்படம், லால் சலாம். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டார் நடித்துள்ளனர். இப்படம், கடந்த 9ஆம் தேதி (பிப்ரவரி) வெளியளாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது. ரஜினி, இதில் மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். கேமியோ ரோலாக இருந்தாலும் இவருக்கு இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் கிரிக்கெட் வீரர்களாக நடித்துள்ளனர். கிரிக்கெட் வீரர் கபில் தேவ்வும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் வருகிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளியான 3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மூன்றாவதாக லால் சலாம் (Lal Salaam) படத்தை இயக்கியிருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டை வைத்து நடத்தப்படும் மத அரசியலை வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படம், வெளியான முதல் நாளில் இருந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
லால் சலாம் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்:
லால் சலாம் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, முதல் நாளில் இப்படம் உலகளவில் ரூ.4 காேடி வரை கலெக்ட் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இரண்டாம் நாளில், மொத்தம் சுமார் 3 கோடி ரூபாயை இப்படம் வசூலித்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
லால் சலாம் திரைப்படத்தின் மூன்றாம் நாள் வசூல் நிலவரம்:
இந்நிலையில் தற்போது லால் சலாம் படம் வெளிவந்து மூன்று நாட்கள் (Lal Salaam Box Office Collection Day 3) கடந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 22 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. லால் சலாம் மூன்றாவது நாள் வசூல் 3 கோடி ரூபாய் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் முதல் மூன்று நாட்களில் லால் சலாம் வசூல் 10 கோடி ரூபாயை கூட கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. லால் சலாம் வசூல் முதல் வாரமே மிக மோசமான நிலையில் இருப்பதால், அடுத்தடுத்த நாட்களில் இதைவிட குறைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லால் சலாம் திரைப்படத்தின் விமர்சனம்:
லால் சலாம் திரைப்படத்தில் மத அரசியல் குறித்து பேசியுள்ள கருத்துகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. கூற வந்த கருத்தை இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் நேர்த்தியுடன் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்திருந்தனர். முதல் பாதி கொஞ்சம் மெதுவாக செல்வதாகவும், ரஜினியின் எண்டிரிக்கு பிறகு படம் சூடு பிடிப்பதாகவும் கருத்துகள் எழுந்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ