லைகா புரொடக்ஷன்ஸ் திரு.சுபாஸ்கரன் மற்றும் தலைமை நிர்வாகி ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் ஆகியோரின் தயாரிப்பில் 'சூப்பர் ஸ்டார்' திரு.ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இவர்கள் நடிப்பில் ரஜினிகாந்த் அவர்களின் மகளும் இயக்குனருமான திரு.ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையில் லால் சலாம் படம் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக உள்ளது. அதை ஒட்டி திரைப்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பிப்ரவரி 9ம் தேதி வெளியாகும் LOVER! இது தான் கதையா?


இதில் நடிகர் செந்தில் பேசும் பொழுது அருமையான கதையை இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் உருவாக்கி உள்ளதாகவும், அவர் கதையை கூறும் பொழுது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்ததாகவும் படத்தில் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்த சக கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும்  கூறினார்.  நடிகை தங்கதுரை பேசியதாவது, முதல்முறையாக 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களுடன் நடிப்பது  மிகவும் பெருமையாக இருப்பதாகவும் நகைச்சுவை கதாபத்திரமாக மட்டும் இல்லாமல், இந்த படத்தில் குணச்சித்திரத்துடன் கூடிய நகைச்சுவை கதாபாத்திரமும் கொடுத்துள்ளார்கள். ஒரு திரை பல்கலைக்கழகத்தில் நுழைந்து வந்த அனுபவத்தை இந்த படம் கொடுப்பதாகவும் அந்த அளவிற்கு அத்தனை கலைஞர்களுடன் பணிபுரிந்ததாகவும் மிகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.


விக்ராந்த் பேசும் பொழுது தனது சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது போதும் என்று இருக்கும் பொழுது இந்த வாய்ப்பு வந்ததாகவும், அப்பொழுது தான் தனக்கு இன்னும் திரைப்பயணம் இருப்பதாகவும், இது கடவுள் கொடுத்த பரிசு என்று மகிழ்ச்சியடைந்ததாகவும் கூறினார். இந்த வாய்ப்பு வழங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களுடன் இந்த படத்தில் நடிப்பது மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் கூறினார். தன்னுடன் நடித்த மூத்த கலைஞர்கள் மற்றும் சக கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பு தொடர்பாக நிறைய ஆலோசனை கொடுத்ததாகவும் நல்ல ஊக்கம் அளித்ததாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.


நடிகர் விஷ்ணு விஷால் பேசும் பொழுது 15 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவு செய்த தருணத்தில் இந்த படம் தனக்கு ஒரு பரிசாக கிடைத்திருப்பதாகவும் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களுடன் பலரும் நடிக்க ஏங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவர் நடிக்கும் படத்தில் அவர் அவருக்கு கீழ் ஒரு கதையின் நாயகனாக நடிப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். இக்கால கட்டத்திற்கு தேவையான கருத்தை கிரிக்கெட் மூலமாக இப்படம் பதிவு செய்வதாகவும் கூறினார். ஒரு இயக்குனராக இந்த கருத்தை படமாக்குவதும் அப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற மிகப்பெரிய ஆளுமை இருப்பதும் மிகுந்த சவால் அளிக்கும் விஷயமாகும். அதை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் திறம்பட செய்து முடித்ததாகவும் கூறினார். பணிபுரிந்த அனைத்து கலைஞர்களுக்கும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசும்பொழுது ஒரு ஊரில் நடக்கும் தேர்த் திருவிழா அதையொட்டி நடக்கும் கிரிக்கெட் போட்டி அந்த போட்டியில் நடக்கும் பிரச்சனைகளை சார்ந்து இந்த படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. விளையாட்டு வினையானால் எங்கு போய் முடியும் என்பதை இந்த படம் பேசுகிறது.
இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் கதாசிரியர் தன்னிடம் இரண்டு கதை கூறியதாகவும் அதில் ஒன்றுதான் லால் சலாம் என்றும் கூறினார். இந்தப் படம் மக்களைச் சார்ந்த ஒரு சிறிய அரசியல் கருத்தை பேசுவதாக கூறினார். குடிமகனாக இருக்கக்கூடிய அனைவருக்கும் அரசியலுடன் ஒரு பங்கு உள்ளது அரசியல் இல்லாமல் எந்த நாடும் ஜனநாயகமும் இயங்க முடியாது என்றும் கூறினார். அரசியல் என்பது எல்லாத்திலும் உள்ளது அதை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதில்தான் எல்லாமே உள்ளது என்று கூறினார். மேலும் படத்தில் பணியாற்றிய மூத்த கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கும் தன்னுடைய சக தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பத்திரிக்கை  மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.


மேலும் படிக்க | டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள 4 சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ