Rajinikanth Salary For Acting In Aishwarya Rajinikanth Lal Salaam Movie: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இதையடுத்து, இப்படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லால் சலாம் திரைப்படம்:


ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், லால் சலாம். இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர் இப்படத்தை லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தம்பி ராமையா, கே.எஸ் ரவிகுமார், லிவிங்ஸ்டன், விக்னேஷ் உள்ளிட்டோர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடிக்கின்றனர். 


லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாப்பாத்திரத்திரத்தில் நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கேமியோ’ கதாப்பாத்திரம் இதுவாகும். 



ரஜினிகாந்தின் சம்பளம்..


தமிழ் திரையுலக ரசிகர்களால் ‘சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த், தான் நடிக்கும் படங்களுக்காக பல கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். லால் சலாம் படத்தில் சில நிமிடங்கள் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக ரஜினிகாந்த் வாங்கியுள்ள சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்தின் கதாப்பாத்திரம் லால் சலாம் படத்தில் 40 நிமிடங்களுக்கு வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இவருக்கு ரூ.40 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு 1 கோடி என்ற கணக்கில் ரஜினிகாந்திற்கு இந்த சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர். 


மகளின் இயக்கத்தில் அப்பா..


நடிகர் ரஜினிகாந்த், முதல் முறையாக தனது இரண்டாவது மகள் செளந்தர்யாவின் இயக்கத்தில் ‘கோச்சடையான்’ படத்தில் நடித்திருந்தார். கிராஃபிக்ஸ் தொழில் நுட்பத்தில் உருவாகியிருந்த இப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை என்றாலும், ஒரு சில ரசிகர்களை இப்படம் கவர்ந்திருந்தது. இதையடுத்து, தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியிருக்கும் படத்தில் முதன்முறையாக நடித்துள்ளார், ரஜினிகாந்த். லால் சலாம் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்த நிலையில், இப்படத்தை தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர். படம், நாளை (பிப்ரவரி 9) வெளியாகிறது. 


மேலும் படிக்க | ராம் சரணின் மகளை பார்த்துக்கொள்பவருக்கு சம்பளம் மட்டும் இவ்வளவா?


ரஜினியின் அடுத்தடுத்த படங்கள்..


நடிகர் ரஜினிகாந்திற்கு 73 வயதாகிறது. இந்த வயதிலும் அவர் தனக்கு பொருத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த ‘ஜெயிலர்’ படம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து, தனது 170வது படமான’வேட்டையன்’ படத்தில் கமிட் ஆனார். இந்த படத்தை ‘ஜெய்பீம்’ புகழ், டி.ஜே.ஞானவேல் இயக்கியிருக்கிறார். இதில் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் இந்த ஆண்டிற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ரஜினிகாந்தின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தின் கதை குறித்த பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, அன்பரிவ் சண்டை பயிற்சி கலைஞர்கள் படத்திற்கு ஸ்டண்ட் இயக்குநர்களாக உள்ளனர். இப்படத்தில் ரஜினிகாந்த் இளைமையான தோற்றத்தில் காட்டப்பட உள்ளதாகவும் இதற்காக டீ-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | மலை போல் குவியும் பணம்.. 2024ல் எகிறும் த்ரிஷாவின் சொத்து மதிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ