கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி மொழி தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசியதையடுத்து இப்பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. அதையொட்டி பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். குறிப்பாக பிராந்திய மொழித் திரைப்படங்கள் இந்தியில் மொழி பெயர்ப்பதை மையப்படுத்தி திரைப்பிரபலங்கள் பேசி வருகின்றனர். கன்னட திரைப்பட நடிகரான சுதீப் மற்றும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ஆகிய இருவரும் இந்தி மொழி தொடர்பாக ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் ட்விட்டரில் பதிவிட்ட கருத்துகள் வைரலாகின.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர்களைத் தொடர்ந்து பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இந்தி மற்றும் சம்ஸ்கிருதம் தொடர்பாக கருத்துகளை வெளியிட்டார். அதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் கருத்துகள் வெளியிடப்பட்டு விவாதிக்கப்பட்டன. இவரைத் தொடர்ந்து நடிகை ரோஜாவும் இந்தி மொழிக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். 


மேலும் படிக்க | கலைக்கு மொழி தடையில்லை... எங்கள் படங்களையும் ரசியுங்கள் - அஜய் தேவ்கனுக்கு நடிகை பதிலடி


இந்த நிலையில் தற்போது நடிகை மதுபாலா இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது., 


நமக்கு ஒரு பொதுவான மொழி தேவை. கலைக்கு மொழி தேவையில்லை. இசையும், கலையும் மனதால் புரிந்து கொள்ளப்படுகின்றன. மொழி என்பது அதிகமான மக்களிடம் ஒரு கருத்தை கொண்டு செல்வதற்கான கருவி மட்டுமே. எனது தனிப்பட்ட அனுபவங்கள் ரோஜா திரைப்படத்தின் மூலமாக நிகழ்ந்தன. தமிழில் ரோஜா திரைப்படம் வெளியான போது, வெற்றிப் படமாக மாறியது. அதே போல, இந்தி மொழியில் வெளியான பிறகு, தேசிய அளவில் வெற்றிப் படமாகவும் ரோஜா இருந்தது. 


தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகியவற்றில் இந்தி திரைப்படங்கள் பெரிதும் விரும்பி பார்க்கப்படுகின்றன. பிற பகுதிகளில் இந்தி திரைப்படங்களுக்கு வரவேற்பு குறைவு என்றாலும் மக்களுக்கு மொழி தெரியாததால் இவ்வாறு இருந்தாலும், அதே மக்கள் தங்கள் மொழியில் வெளியாகும் திரைப்படங்களை ரசித்து பார்க்கிறார்கள். 


இந்தி விருப்பமானது என்பது எனக்கு வருத்தமளிக்கிறது, ஏனெனில் அரசியல் ரீதியாக அது மனிதர்களை இணைக்கும் கருவியை பறிக்கிறது. நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும், நம்மை பிரிக்க மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது மலையாளத் திரைப்படங்களை சப்டைட்டில் உதவியோடு பார்த்துக் கொண்டிருக்கிறோம். உதாரணமாக, துல்கர் சல்மான் சிறப்பான திரைப்படங்களில் நடிக்கிறார் என்பதை நாம் பெருமையுடன் பார்க்கிறோம். எனவே இது சண்டையிடுவதற்கான நேரம் அல்ல. இது கொண்டாடப்பட வேண்டிய விஷயமாகும்.


தென்னிந்தியாவில் அரசு இந்தி மொழியைக் கடுமையாக எதிர்த்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளிகளில் இந்தி கற்றுத் தரவில்லை எனப் பிரச்னைகள் எழுந்தன. இந்தி ஏன் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் அது நம் வரலாறு. நீங்கள் இந்தியாவில் வாழ்ந்துகொண்டு, இந்தி மொழியைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால், பாதிக்கப்படுவது யார். அதே நேரம் சிலர் இந்தி மொழியை நிச்சயமாகக் கற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்கள். 


மொழிவாரியான இந்த விவாதம் எனக்கு கவலை அளிக்கிறது. தொலைக்காட்சி சேனல்களின் அனைத்து மொழி திரைப்படங்களையும் இந்தி மொழியில் டப் செய்யப்படுவதை நாம் பார்த்துதான் வருகிறோம். அப்படி இருக்கும் போது, இந்த விவாதம் ஏன் எழ வேண்டும? ஒருவேளை பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் முதலான வெற்றி திரைப்படங்களின் காரணமாக இந்த விவாதம் எழுந்திருக்கலாம்.


இந்தியைப் பல்வேறு தரப்பு மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக அரசு மக்களிடம் இந்தி மொழியைப் பயன்படுத்தி மக்களைப் பிரிக்கும் வேலைகளைச் செய்ய கூடாது. இந்தி மொழி நமது தேசிய மொழி என்று கூறுவது தவறானது. அது அதிகாரப்பூர்வ மொழிகளுள் ஒன்று. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.  


மேலும் படிக்க | இந்தியை விரும்பாதவர்கள் அயல் நாட்டுக்கார்கள் - உ.பி அமைச்சர் திமிர் பேச்சு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR