Harish Kalyan In Star Movie : கடந்த மே மாதம் வெளியாகி வெற்றி பெற்ற படம், ஸ்டார். இந்த படத்தில் கவின் ஹீரோவாக நடித்திருந்தார். இளன் இயக்கியிருந்த இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர், ஹரிஷ் கல்யாண். இதில் இவர் நடிக்காதது ஏன்? என்பது குறித்து முதன்முறையாக மனம் திறந்திருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்டார் திரைப்படம்:


இந்த ஆண்டு வெளியாகி, மக்களின் வரவேற்பினை பெற்ற படங்களுள் ஒன்று, ஸ்டார். இளன் இயக்கியிருந்த இந்த படத்தை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனம் தயாரித்திருந்தது. கவினுடன் இணைந்து லால், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்தின் ரிலீஸிற்கு முன்னர் டிரைலர் வெளியானது. இது பயங்கரமாக இருந்ததால், படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியது. 


இந்த ஆண்டின் மே மாதம் 10ஆம் தேதி, வெளியான ஸ்டார் திரைப்படம், திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்கள் பலமாக ரெஸ்பான்ஸ் பயங்கரமாக இருந்தது. இருப்பினும், இப்படம் ஓடிடியில் வெளியான பிறகு இதனை நெட்டிசனங்கள் பலர் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். 


முதலில் நடிக்க இருந்த ஹீரோ..


நடிகர் கவின், ஆரம்பத்தில் சின்னத்திரையில் நாயகனாக நடித்து பிரபலமானார். இப்படி நடித்து, பலர் மனங்களில் இடம் பிடித்த இவர், அடுத்து  பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார். இதையடுத்து, பலரும் இவரை அறிய ஆரம்பித்தனர். கொஞ்சம் கொஞ்சமாக படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர், இப்போது பிரபல ஹீரோவாக வலம் வர ஆரம்பித்திருக்கிறார். 



மேலும் படிக்க | Star Movie Review : கவினின் ‘ஸ்டார்’ படத்திற்கு 5 ஸ்டார் தரலாமா? தெளிவான திரை விமர்சனம்!


ஸ்டார் படத்தில் முதலில் நடிக்க இருந்தது ஹரிஷ் கல்யாண் என்பது அனைவருக்கும் தெரியும். இது குறித்த போட்டோ ஷூட் எடுக்கப்பட்டு, அவை ரிலீஸும் செய்யப்பட்டன. ஆனால், எந்த காரணத்தினாலோ இறுதியில் கவின் அதில் ஹீரோவாக நியமிக்கப்பட்டார். இது குறித்து ஹரீஷ் கல்யாண் முதன்முறையாக மனம் திறந்திருக்கிறார். 


ஏன் நடிக்கவில்லை?ஹரீஷ் கல்யாண் பதில்!


ஹரிஷ் கல்யாண், தற்போது லப்பர் பந்து என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படம் குறித்த ப்ரமோஷன் பணிகளிலும், நேர்காணல்களிலும் கலந்து கொண்டு வருகிறார். அப்படி ஒரு நிகழ்ச்சியில்தான், தற்போது ஸ்டார் படம் குறித்து பேசியிருக்கிறார். ஸ்டார் படத்தின் வேலைகள், 2020ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது என்று கூறிய ஹரீஷ் கல்யாண், அதன் பிறகு கொரோனா வந்ததால் 2 ஆண்டுகள் அந்த வேலைகள் தடைப்பட்டு போனதாம். 


தொடர்ந்து பேசிய அவர், சில நாட்கள் இந்த படம் குறித்த பேச்சே வரவில்லை என்று கூறினார். திடீரென்று இந்த படத்தில் வேறு ஒருவர் நடிப்பதாக அறிவிப்பு வெளியானதாகவும், இது குறித்து எனக்கு தனியாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறினார். இந்த விஷயம்தான் தன்னை அப்செட் செய்ததாகவும் கூறினார். தற்போது, அவரது நேர்காணல் வைரலாகி வருகிறது. 


ஸ்டார் படம் எப்படி? 


ஸ்டார் திரைப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ஹிட் அடித்தது. ஆனால், பெரும்பாலான சினிமா ரசிகர்களை இப்படம் திருப்தி படுத்தவில்லை என்று கூறப்பட்டது. இதனால்தான் ஓடிடியில் வெளியான பிறகு நெட்டசன்களால் ட்ரோல் செய்யப்பட்டது. 


மேலும் படிக்க | மழை நிவாரண நிதிக்கு பெரிய தொகையை கொடுத்த ஹரிஷ் கல்யாண்! எவ்வளவு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ