Napoleon Son Dhanoosh To Get Married Second Time : கோலிவுட் உலகில், பயங்கர வில்லன் நடிகராகவும், பின்னர் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர், நெப்போலியன். 90கள் முதல் 2022ஆம் ஆண்டு வரை திரையுலகில் ஆக்டிவாக இருந்த இவர், இடையில் தமிழக அரசியல் களத்திலும் படு ஆக்டிவாக இருந்தார். இந்தியாவில் வாழ்ந்து வந்த இவரது இவரது மூத்த மகன் தனுஷ், சிறுவயதிலேயே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். இதனால், அவருக்கு சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்ற இவர், அங்கேயே செட்டிலாகி விட்டார். சில நாட்களுக்கு முன்பு, நெப்போலியனின் மகனுக்கு திருமணம் நடைப்பெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமண பேச்சுவார்த்தை..


நெப்போலியனுக்கு தனுஷ்-குணால் என இரு மகன்கள் இருக்கின்றனர். நெப்போலியனின் மூத்த மகன் தனுஷிற்கு 26 வயது ஆகிறது. இவருக்கும், அக்‌ஷயா என்ற 21 வயது பெண்ணிற்கும்தான் திருமணம் நடைப்பெற்றிருக்கிறது. தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க பெண் தேடிய நெப்போலியன், தன் மனைவி ஜெயசுதாவின் வீட்டிற்கு அருகில் குடியிருந்த அக்‌ஷயா மற்றும் அவரது குடும்பம் பற்றி கேள்விப்பட்டார்.


அக்‌ஷயாவிற்கு, தனுஷை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது குடும்பத்தாரிடம் தனுஷின் பாட்டி பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார். இதையடுத்து, நெப்போலியனின் மனைவி ஜெயசுதாவும் இந்தியாவிற்கு வந்து, பெண் வீட்டாரை சந்தித்திருக்கிறார். அக்‌ஷயாவை பர்சனலாக சந்தித்த அவர், “தனுஷை திருமணம் செய்ய யாரேனும் உங்களை கட்டாயப்படுத்தினார்களா?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு இல்லை என்று பதிலளித்த அக்‌ஷயா, தனக்கு தனுஷை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். 


மேலும் படிக்க - Nepolean Son : நடிகர் நெப்போலியனின் மகனுக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?


தடபுடலாக நடந்த திருமணம்


நெப்போலியன் மகன் தனுஷிற்கு, சில நாட்களுக்கு முன்பு ஜப்பானில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில், நடிகைகள் ராதிகா, சுஹாசினி, கலா மாஸ்டர், குஷ்பூ, மீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நேரில் வர முடியாத சிவகர்த்திகேயன் உள்பட சில நடிகர்கள், வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்தனர். 


இன்னும் ஒருமுறை திருமணம்?


தன் மகனின் திருமணத்திற்கு பிறகு, தன் மகனுக்கு 6 மாதத்திற்கு பிறகு மீண்டும் திருமணம் செய்து வைக்க உள்ளதாக தெரிவித்தார். அமெரிக்காவின் சட்டப்படி, தனுஷ் போல உடல் குறைபாடு இருப்பவர்கள், திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறப்படுகிறது. இதனால்தான், இவர்களுக்கு ஜப்பானில் திருமணம் நடந்ததாக தகவல்கள் வெளியானது. ஜப்பானில் தனுஷும் அக்‌ஷயாவும் 6 மாதம் தங்கியிருக்க பாேவதாகவும், அவர்கள் அமெரிக்காவிற்கு திரும்பிய பிறகு அந்த நாட்டின் சட்டப்படி மீண்டும் திருமணம் செய்ய உள்ளதாக கூறியிருக்கிறார். 


திருமணத்திற்கு ஆன செலவு


மகனின் திருமணத்திற்கு ரூ.150 கோடி செலவானதாக கூறியிருக்கிறார், நெப்போலியன். இந்த திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. ஒரு சிலர், இந்த திருமணம் குறித்து வன்மமான கமெண்டுகளை கூறி வந்தாலும், சிலர் மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க - நடிகர் நெப்போலியனுக்கு அமெரிக்காவில் இவ்வளவு பெரிய வீடா? வாயடைத்துப்போன ரசிகர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ