73 வயதிலும் இளமையின் துள்ளளுடன் வரிசையாக படங்களில் கமிட் ஆகி நடித்துக்கொண்டு வருபவர், நடிகர் ரஜினிகாந்தின். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகராக விளங்கும் ரஜினி, கடந்த சில ஆண்டுகளாக வருடத்திற்கு 1 படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இந்த நிலையில், இவர் சமீபத்தில் நடித்து முடித்துக்கொடுத்தபடம் வேட்டையன். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேட்டையன் திரைப்படம்:


வேட்டையன் திரைப்படம், ரஜினிகாந்தின் 170வது படமாகும். இந்த படத்தை ‘ஜெய்பீம்’ படப்புகழ் டி.ஜே.ஞானவேல் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் வித்தியாசமான தோற்றத்தில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘விக்ரம்’ படத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழி திரையுலகை சேர்ந்தவர்களையும் நடிக்க வைத்தது போல, வேட்டையன் படத்திலும் பகத் பாசில், ராணா டகுபதி, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் இணைந்திருக்கின்றனர். மலையாள நாயகி மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். 


ரஜினிகாந்த் குறித்த படக்காட்சிகள் உள்பட, படத்தின் முழு படப்பிடிப்பும் சில மாதங்களுக்கு முன்பு நடைப்பெற்று முடிந்தது. இந்த நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்பாேது நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | தசாவதாரம் படத்தின் சாதனையை முறியடித்த இந்தியன் கமல்ஹாசன்.. அதுக்குன்னு இத்தனை கெட்டப்பா


வேட்டையன் படத்துடன் மோதும் இன்னொரு படம்…


வேட்டையன் திரைப்படத்தை போல, அதிக எதிர்பார்ப்புகளுடன் உருவாகியிருக்கும் படம், கங்குவா. சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை, சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக நடைப்பெற்று வருகிறது. கிராஃபிக்ஸ் தொழில்நுட்ப வேலைகள் இதில் அதிகமாக இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சூர்யாவிற்கு ஜாேடியாக இந்த படத்தில் பாலிவுட் நாயகி திஷா பதானி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாபி டியோல், ரெடின் கிங்க்ஸ்லி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.  இந்த படம் வேட்டையன் படத்திற்கு போட்டியாக ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



ரிலீஸ் எப்போது?


இந்த வருட தீபாவளியை குறிவைத்து, பல படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில், கங்குவா மற்றும் வேட்டையன் படங்களும் தயாராகியிருக்கிறது. இந்த இரு படங்களுமே அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இரண்டுமே பெரிய நடிகர்களின் படங்கள் என்பதால் இவற்றின் மீதுள்ள எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. 


மேலும் படிக்க | Archana Ravichandran : பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ