ரஞ்சித்திற்கு ஆதரவாக பேசும் Ex மனைவி-பிரபல நடிகை ப்ரியா ராமன்! என்ன சொன்னார் தெரியுமா?
Actor Ranjith Ex Wife Priya Raman : நடிகர் ரஞ்சித் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் முக்கிய போட்டியாளராக பங்கேற்று வருகிறார். இவர் குறித்து அவரது முன்னாள் மனைவி ப்ரியா ராமன் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
Actor Ranjith Ex Wife Priya Raman : 90களில் பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரமாகவும், சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து பிரபலமானவர், ரஞ்சித். இவர், விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்குள் முக்கிய போட்டியாளராக நுழைந்தார். இவர் குறித்து இவரது மனைவி ப்ரியா ராமன் ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார்.
கவுண்டம்பாளையம் சர்ச்சை!
நடிகர் ரஞ்சித், 90கள் மற்றும் 2000 ஆண்டு காலங்களில் வெளியான பல படங்களில் துணை கதாப்பாத்திரங்களிலும், முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். சில படங்களில் நெகடிவ் ஷேட் கதாப்பாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். நல்ல நடிகர் என்ற பெயரை பெற்ற இவர், நல்ல இயக்குநராகவும் மாற ஆசைப்பட்டார். அதற்காக சில வருடங்களுக்கு முன்னர் பீஷ்மர் படத்தை இயக்கி ஒத்திகை பார்த்த இவர், சமீபத்தில் கவுண்டம்பாளையம் என்ற ஒரு படத்தை எடுத்தார்.
இந்த படத்தின் டைட்டிலே சாதிக்குறியீடு இருப்பதாக கூறி சர்ச்சையை கிளப்பியதை அடுத்து, படத்திலும் சர்ச்சைக்குரிய பல்வேறு காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றிருந்தன. இரட்டை அர்த்த வசனங்கள், சாதிய குறியீடுகள், முகம் சுளிக்க வைக்க காட்கிள் என படத்தில் இருந்த பிரச்சனைகள் படம் பார்த்தவர்கள் விமர்சனத்தில் அடுக்கிக்கொண்டே செல்கின்றனர். இதன் மூலம் தனக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை, மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்குள் நுழைந்திருப்பதாக முதல் எபிசோடில் கூறினார் ரஞ்சித்.
வந்த புதிதில் அமைதியாக இருந்தாலும், நாட்கள் போகப்பாேக, தனது உண்மை விளையாட்டை ரஞ்சித் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இவர் குறித்து இவரது முன்னாள் மனைவி சில விஷயங்களை பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
முன்னாள் மனைவி..
ரஞ்சித்தை, 1999ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டவர், ப்ரியா ராமன். சூர்ய வம்சம் படத்தில் சரத்குமாருக்கு முறைப்பெண்ணாக நடித்து பிரபலமான இவர், பின்னர் ரஞ்சித்தை திருமணம் செய்து படங்களில் பெரிதாக நடிக்காமல் இருந்தார். 2015ஆம் ஆண்டில் ப்ரியா-ரஞ்சித் விவாகரத்து பெற்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான செம்பருத்து தொடர் இவருக்கு கம்-பேக் ஆக அமைந்தது.
ரஞ்சித் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கும் அவர், “ரஞ்சித் ஆர்வ கோளாறு கிடையாது. அவருக்கு எந்த நேரத்தில் அடிக்க வேண்டும் என்பது தெரியும். அந்த சமயத்தில் அவர் கண்டிப்பாக ஜொலிப்பார்” என்று கூறியிருக்கிறார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜாக்குலின்-ரஞ்சித் தந்தை-மகள் பர்ஃபாமன்ஸ் குறித்து பேசிய அவர் அதை ரஞ்சித் மிகவும் அழகாக செய்திருந்ததாக பேசியிருக்கிறார்.
விவாகரத்து..
ரஞ்சித்-ப்ரியா ராமனுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்கள், ப்ரியாவிடம்தான் வளருகின்றனர். இவர்கள் இருவரும் பிரிந்து சில ஆண்டுகளுக்கு பின்பு ஒன்றாக புகைப்படத்தை பதிவிட்டனர். இதனால், இருவரும் ஒரு வேலை ஒன்று சேர்ந்து விட்டனரோ என சிலர் பேசி வந்தனர். ஆனால், ஒரு சீரியலில் ஒன்றாக சேர்ந்து நடிக்க வேண்டி இருந்ததால் அவர்கள் அந்த புகைப்படத்தை எடுத்துக்கொண்டனராம்.
மேலும் படிக்க | பிக்பாஸ் 8: அர்னவ் எவிக்ஷன்..கதறியழுத அன்ஷிதா-கடுப்பான விஜய் சேதுபதி..என்னாச்சு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ