Sivakumar Viral Video of throwing a shawl given by his fan viral video: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ கருப்பையா எழுதிய இப்படித்தான் உருவானேன் நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது இதில் நடிகர் சிவகுமார் மற்றும் பழ. நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் திடீரென மேடையில் இருந்து பேசும்போது குடிநீருக்காக போராடியது உண்ணாவிரதம் இருந்தது  குறித்து பேசி  பழ.கருப்பையாவின் காலில் விழுந்து வணங்கி மீண்டும் பேச ஆரம்பித்தார் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து நிகழ்ச்சி முடிவில் வயதான ரசிகர் ஒருவர் சிவக்குமாருக்கு  பொன்னாடை அணிவிக்க தான் கொண்டு வந்த பொன்னாடையை சிவக்குமாருக்கு அணிவித்து வாழ்த்து தெரிவிக்க  முயன்றார் அப்பொழுது அதை தடுத்து பொன்னாடை வாங்கி தூக்கி வீசி விட்டு சென்றார் இதனால் அந்த ரசிகர் மனவேதனை அடைந்தார் தொடர்ந்து பொது இடங்களில் நடிகர் சிவக்குமார் கோபமாக நடந்து கொள்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


நெட்டிசன்கள் கண்டனம்..


சிவகுமாரின் இந்த செயலுக்கு மக்கள் பலர் ட்விட்டர் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பொன்னாடையை போர்த்துவது பிடிக்கவில்லை என்றால் அதை பொறுமையாக அவரிடம் கூறியிருக்கலாம் என்றும் அதை விட்டுவிட்டு இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்றும் கூறி வருகின்றனர். சிவகுமாருக்கு தற்போது 82 வயதாகிறது. ஒரு சில ரசிகர்கள், பெரிய மனிதராக இருந்தும் இன்னும் இவருக்கு பெரிய மனிதர் போல நடந்து கொள்ள தெரியவில்லையே என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.


மேலும் படிக்க | பல காதல் படங்களை இயக்கிய கெளதம் மேனனின் உண்மை காதல் கதை தெரியுமா?



செல்போனை தூக்கி வீசிய சிவகுமார்...


நடிகர் சிவகுமார் இது போன்று நடந்து கொள்வது இது முதன்முறை அல்ல. 2019ஆம் ஆண்டு ஒரு கடைத்திறப்பு விழாவில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டார். அப்போது, அவர் கடை திறப்பதற்கு ரிப்பன் வெட்டிக்கொண்டிருந்த சமயத்தில், ஒரு ரசிகர் அனுமதியின்றி அவருடன் செல்பி எடுத்தார். இதை பார்த்து கோபமான சிவகுமார், உடனே அந்த செல்போனை பிடுங்கி விசிறியெறிந்தார். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நடிகர் சூர்யா அந்த ரசிகருக்கு செல்போன் வாங்கி கொடுத்ததாக கூறப்பட்டது. தந்தையின் செயலுக்காக நடிகர் கார்த்தியை மேடை மீது வைத்து, நடிகை கஸ்தூரி கேலி செய்தார். இதனால் கோபமான கார்த்தி, தனது தந்தையையும் தன்னையும் வைத்து கஸ்தூரி கேலி செய்ததை கண்டித்தார். 


சிவகுமாரின் இது போன்ற செயல்கள் அவரை தாக்குவது மட்டுமன்றி அவரை சார்ந்தோரையும் தாக்கி வருகிறது. சிவகுமார் மட்டுமல்ல, திரையுலக ஜாம்பவான் கலைஞர்களுள் ஒருவராக இருக்கும் இசைஞானி இளையராஜா கூட, சில சமயங்களில் சக மனிதர்களை மனிதர்களாக மதிக்காதது போன்று நடந்து கொண்டு வருகிறார். இவரது பேச்சுகளும், செயல்பாடுகளும் கூட ரசிகர்கள் மத்தியில் கண்டனத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | ஷாருக்கான் பட சாதனையை முறியடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ