Latest News Thalapathy 69 Remake Movie : விரைவில் அரசியலில் களமிறங்க இருக்கும் நடிகர் விஜய், தனது கடைசி படமான ‘தளபதி 69’ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் அப்டேட்டுகள், தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தளபதி 69:


30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ் சினிமா ரசிகர்களை தனது படங்களால் மகிழ்வித்து வந்தவர் நடிகர் விஜய். கடந்த பிப்ரவரி மாதம், ‘தமிழக வெற்றிக்கழகம்’ கட்சியை தொடங்கிய அவர், இதுவரை கமிட்டாகியிருக்கும் படங்களில் நடித்து முடித்த பிறகு சினிமாவை விட்டு மொத்தமாக விலகி அரசியலில் முழு நேரமாக இறங்க இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 


விஜய், கடைசியாக அவரது 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படாத காரணத்தால் இதனை ‘தளபதி 69’ என்று பலரும் அழைத்து வருகின்றனர். இந்த படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்பு நடைப்பெற்றது. இதில், வேட்டி-சட்டை அணிந்து கலந்து கொண்ட நடிகர் விஜய், புதுவித தாேற்றத்தில் மாஸாக இருந்தார். 



ரீ-மேக் படமா? 


தளபதி 69 திரைப்படம், அரசியல் படமாக இருக்குமா, த்ரில்லர் படமாக இருக்குமா, விஜய்யின் படமாக இருக்குமா என்பது குறித்த பல குழப்பங்கள் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. காரணம், அரசியல் பயணத்தை துவங்க இருக்கும் விஜய்யின் கடைசி படம் இது என்பதால், இப்படத்தின் கதை மீது ரசிகர்களுக்கு கடும் ஆவல் நிலவி வருகிறது. இந்த நிலையில், இப்படம் ஒரு தெலுங்கு படத்தின் ரீ-மேக் நெட்டிசன்கள் பலர் பேசி வருகின்றனர். 


நந்தமுரி பாலகிருஷ்ணா (பாலைய்யா) நடிப்பில், கடந்த ஆண்டு வெளியான படம், பகவந்த் கேசரி. இந்த படத்தில் ஸ்ரீலீலா, காஜல் அகர்வால், அர்ஜுன் ராம்பால் என பலர் நடித்திருந்தனர். இந்த படம், ஹிட் அடித்தது என்றாலும் விமர்சன ரீதியாக பலத்த அடி வாங்கியது. இதையடுத்து, இதன் ரீ-மேக்தான் தளபதி 69 படம் என்று தகவல்கள் வெளியானவுடன் ரசிகர்கள் டென்ஷனாகி விட்டனர். இந்த தகவல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. 


மேலும் படிக்க | Thalapathy 69 : தளபதி 69 படத்தின் பூஜை புகைப்படங்கள்! விஜய் அசத்தலா இருக்காறே!!!



கமல்ஹாசனுக்கு சொன்ன கதை..


நடிகர் கமல்ஹாசனின் 233வது படத்தை ஹெச்.வினோத் இயக்க இருந்தார். ஆனால், ஒரு சில காரணங்களினால் இந்த படம் டிராப் ஆகிவிட்டது. தற்போது இந்த கதையையே, கொஞ்சம் மெருகேற்றி, விஜய்க்காக அதை தயார் செய்து, அதை விஜய்யை வைத்தே இயக்க இருக்கிறார் ஹெச்.வினோத். எதுவாக இருப்பினும், படம் வெளியான பிறகே படத்தின் உண்மை நிலை தெரியும். 


தளபதி 69 படத்தில் நடிப்பவர்கள்…


தளபதி 69 படத்தில் விஜய்யுடன் சேர்ந்து அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் பூஜா ஹெக்டே. பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இந்த ஜாேடியை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். அனிமல் படத்தில் வில்லனாக வந்த பாபி டியால், இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாகிறார். மலையாள நாயகி மமிதா பைஜு, நரேன், கெளதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களாக வருகின்றனர். 


இப்படத்தின் பாடல் ஷூட்டிங் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த பாடலுக்கு ‘ஆர்மி’ என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | தளபதி 69 ஷூட்டிங் தொடங்குவது எப்போது? வெளியானது தகவல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ