வீர தீர சூரன் படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும் படம்! இயக்குநர் யார் தெரியுமா?
Vikram Chiyaan 63 Movie Director : தமிழ் திரை உலகில் முக்கிய நடிகராக விளங்கும் விக்ரம் தற்போது வீர தீர சூரன் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்குப் பிறகு அவர் நடிக்கப் போகும் படம் எது தெரியுமா?
Vikram Chiyaan 63 Movie Director : கோலிவுட் திரையுலகில் உள்ள கடின உழைப்பாளி நடிகர்களுள் ஒருவர், சியான் விக்ரம். ஒவ்வொரு படத்திற்கும் தனது கெட்-அப்பை மாற்றி, கேரக்டரை மாற்றி வாழும் இவர், தற்பாேது நடித்து முடித்திருக்கும் படம் வீர தீர சூரன்.
வீர தீர சூரன்:
கடந்த ஆண்டு சித்தா படம் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் அருண்குமார், வீர தீர சூரன் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சியான் விக்ரம் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் விக்ரமுடன் சேர்ந்து முக்கிய கதாபாத்திரங்களை துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
வீர தீர சூரன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். எஸ் ஜே சூர்யா போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வில்லனாக வருகிறார். தற்போது வெளியாகியிருக்கும் டீசரை வைத்து பார்க்கும் போது இப்படம் எமோஷனல் த்ரில்லராக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
வீர தீர சூரன் படத்தை இயக்கியிருக்கும் அருண்குமார் இதற்கு முன்னர் சேதுபதி, சிந்துபாத், பண்ணையாரும் பத்மினியும் உள்பட பல படங்களை இயக்கி தமிழ் திரையுவதில் தனித்துவமான இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார். இதனால் இந்தப் படத்தின் மீதும் எதிர்பார்ப்புகள் அதிகமாக எழுந்துள்ளது.
சியான் விக்ரம் நடிக்கும் அடுத்த படம்:நடிகர் விக்ரம் கடைசியாக தங்கலான் படத்தில் நடித்திருந்தார். சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தை காண்பித்த இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்கியிருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம், சரியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பல ஆண்டுகளாக ஹிட் கொடுக்காமல் இருக்கும் விக்ரமின் சினிமா வாழ்க்கையில் இது அடுத்த தோல்வி படமாக மாறியது. விரைவில் வெளியாக இருக்கும் வீர தீர சூரன் படத்தின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
விக்ரம் தனது 63 வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை மடோன் அஸ்வின் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. மண்டேலா மற்றும் மாவீரன் ஆகிய வெற்றி படங்களை கொடுத்த மடோன் அஸ்வின், தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த இயக்குனராக வலம் வருகிறார். தற்போது, இவர் விக்ரமைப்பு ஒரு படத்தை இயக்க இருக்கிறாராம். இந்தப் படத்தை சாந்தி டாக்கீஸ் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த காம்போவை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | தங்கலான் போன்ற படம் எடுக்க தைரியம் வேணும்... - நடிகர் விக்ரம்
வீர தீர சூரன் ரிலீஸ்:
வீர தீர சூரன் படத்தின் படப்பிடிப்பு, விக்ரமின் தங்கலான் படத்தின் வேலைகளுக்கு பிறகு தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு, சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்ததாக கூறப்படுகிறது. 58 வயதான நிலையிலும் இந்த படத்தில் இளமை தோற்றத்தில் மாஸ் காட்டுகிறார் விக்ரம். இவர், ஒரு குழந்தைக்கு தந்தையாக இப்படத்தில் நடித்திருக்கிறார்.
இப்படம், வரும் 2025ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இப்படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். கூடவே, சியான்63 படம் குறித்த அப்டேட்டும் வெளியாகலாம்.
மேலும் படிக்க | தங்கலான் 2ஆம் பாகம் உருவாகிறது: நடிகர் விக்ரம் அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ