தங்கலான் படம் ஓடிடியில் ரிலீஸ்!! எந்த தளத்தில் எப்பாேது முதல் பார்க்கலாம்?

Thangalaan OTT Release : சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம், ஓடிடியில் எப்போது வெளியாகிறது? தகவலை இங்கு பார்க்கலாம்?   

Written by - Yuvashree | Last Updated : Sep 10, 2024, 10:45 AM IST
  • தங்கலான் ஓடிடி ரிலீஸ்!
  • விக்ரம் நடித்த படம்..
  • பா.ரஞ்சித் இயக்கியிருக்கிறார்
தங்கலான் படம் ஓடிடியில் ரிலீஸ்!! எந்த தளத்தில் எப்பாேது முதல் பார்க்கலாம்?  title=

Thangalaan OTT Release : பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான படம், தங்கலான். விக்ரம் ஹீரோவாக நடித்திருந்த இந்த படம், சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

தங்கலான்:

இந்த ஆண்டில் அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தமிழ் படங்களில் ஒன்று, தங்கலான். ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா மற்றும் நீளம் ப்ரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவான இப்படம் கடந்த மாதம் (ஆகஸ்ட்), 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கோலிவுட் ஹீரோக்களிலேயே ஒவ்வொரு கதையிலும் வெவ்வேறு வகையான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அசத்துபவர் விக்ரம். அந்த வகையில், தங்கலான் படத்திலும் ஒரு புதுமையான கேரக்டரில் நடித்திருந்தார்.

விக்ரமுடன் இணைந்து பார்வதி திருவோது, மாளவிகா மோகனன், டேனியல், பசுபதி, வேட்டை முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தன் கதைகளின் மூலம் புரட்சிமிகு கருத்துக்களை கூறும் பா.ரஞ்சித் தங்கலான் படத்தின் மூலமாகவும் புதுவிதமான கதையை சொல்ல முற்பட்டு இருந்தார். 

ஓடிடி ரிலீஸ்:

இந்தியாவில் ஓடிடி தளங்களின் வருகை பெருகிவிட்டதால், திரையரங்குகளில் வெளியாகும் படங்கள், ஒரு சில வாரங்கிளேயே ஓடிடி தளங்களில் வெளியாகி விடுகிறது. அந்த வகையில், கடந்த மாதம் வெளியான தங்கலான் படமும் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இந்த படம், எந்த தளத்தில் எப்பாேது வெளியாகிறது தெரியுமா? 

எந்த தளத்தில் வெளியீடு? 

தங்கலான் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் தளம் வாங்கியிருக்கிறது. இதையடுத்து, இந்த தளத்தில்தான் படம் வெளியாகும் என கூறப்படுகிறது. வரும் 20ஆம் தேதி (செப்டம்பர்), தங்கலான் படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | Vaazhai OTT : வாழை திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ்!! எப்போது? எந்த தளத்தில் பார்ப்பது?

Thangalaan

கதை என்ன?

பதினெட்டாம் நூற்றாண்டுகளில் நடப்பது போல தங்கலான் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மெட்ராஸின் வட ஆற்காடு பகுதியில் தனது குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினருடன் வாழ்ந்து வருகிறான், தங்கலான். இந்த கிராமத்திற்கு வரும் பிரிட்டிஷ் அரசாங்கத்தினர், இங்கு தங்கம் இருப்பதை தெரிந்து கொண்டு, இந்த கிராமத்தினரை வைத்து, தங்கம் எடுக்க முயற்சிக்கின்றனர். இவர்களுக்கு, விக்ரம் தலைமை தாங்குகிறார். இவர்களின் நிலத்தை காக்கும் சூனியக்காரியாக இருக்கிறார், ஆரத்தி (மாளவிகா மோகனன்). தங்க வேட்டைக்காக போகும் கிராமத்தினர் செத்து மடிகின்றனர். இறுதியில் என்ன நடந்தது? தங்கம் யார் கைக்கு கிடைத்தது? இதை வைத்துதான் சுழல்கிறது தங்கலான் படத்தின் கதை. 

கலவையான விமர்சனங்கள்..

2024ஆம் ஆண்டை பொருத்தவரை, முதல் ஆறு மாதங்கள் பெரிய ஹீரோக்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஜூலை மாதத்தில் இருந்துதான் டாப் ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளிவர தொடங்கின. இந்த நிலையில், விக்ரம் நடத்திருந்த தங்கலான் படமும் பெருத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஆனால், இதில் பேசப்பட்டிருக்கும் டைலாக்குகளும், காட்சிகளும் சரியாக புரியவில்லை என்றும் கதை பொறுமையாக நகர்வதாகவும் படம் பார்த்தவர்கள் தெரிவித்தனர். 

சினிமாவை விரும்பி பார்ப்பவர்களுக்கு இப்படம் பிடித்திருந்தாலும் ஜெனரல் ஆடியன்ஸை படம் ஈர்க்க தவறியிருப்பது படத்தின் பெரிய குறையாக பார்க்கப்பட்டது. ஓடிடியில் வெளியான பின்பாவது, இப்படம் குறித்த மக்களின் பார்வை மாறுகிறதா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

மேலும் படிக்க | GOAT OTT : தி கோட் படம் எந்த ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News