Malaika Arora Father Anil Arora Commits Suicide : பாலிவுட்டில் பிரபல நடிகையாக விளங்கும் மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் என்ன?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலைகா அரோராவின் தந்தை:


இந்தியா முழுவதும் பிரபலமாகியிருக்கும் நடிகைகளுள் ஒருவர், மலைகா அரோரா. இவரது தந்தை அனில் அரோரா இன்று (செப்டம்பர் 11) காலை 9 மணியளவில் கட்டடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீஸார், இந்த தற்கொலைக்கு பின்னால் இருக்கும் காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த முழு விவரம், போலீஸார் தரப்பில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


என்ன நடந்தது? 


மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா, மும்பையின் பாந்த்ரா பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்திருக்கிறார். இன்று காலை 9 மணி அளவில் இவர், தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது, மும்பை போலீஸார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று, விசாரித்து வருவதாக காவல் துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மலைகா அரோரா, புனேவில் வசித்து வருகிறார். தனது தந்தை இறந்த செய்தியை கேள்வி பட்டவுடன் அவர் உடனே தனது இல்லத்தில் இருந்து கிளம்பி மும்பை வந்திருப்பதாக கூறப்படுகிறது. மலைகாவின் முன்னாள் கணவர் அர்பாஸ் கான், மலைகாவின் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வெளியில் நின்றிருந்ததாகவும், அந்த ஊரின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 


யார் இந்த மலைகா அரோரா?


மலைகா அரோரா, தனது திரை பயணத்தை டிவி தொகுப்பாளராகவும், நடனம் ஆடுபவராகவும் ஆரம்பித்தார். அப்படியே மாடலாக மாறிய இவர், சினிமாவில் துணை கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். உயிரே படத்தில் வரும் “சைய்ய சைய்யா” பாடலில் ஆடும் நடிகையே இவர்தான்.


மேலும் படிக்க | பிரபல பாலிவுட் நடிகரின் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட காதலி..கொதித்தெழுந்த ரசிகர்கள்..


இவருக்கு 11 வயது இருக்கும் போதே இவரது தந்தையும் தாயும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வந்திருக்கின்றனர். தற்போது, பாலிவுட்டில் இருக்கும் பணக்கார மற்றும் பிரபலமான நடிகைகளுள் ஒருவராக விளங்கி வருகிறார். 1998ஆம் ஆண்டு சக நடிகரான அர்பாஸ் கானை திருமணம் செய்து கொண்ட இவர், 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு அவரை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு அர்ஹான் கான் எனும் மகன் இருக்கிறார். இவரை, கோ-பேரண்டிங் முறையில் இருவரும் வளர்த்து வருகின்றனர். 


பிரபல தயாரிப்பாளரான போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரும் இவரும், 2016ஆம் ஆண்டு முதல் ரிலேஷன்ஷிப்பில் இருக்கின்றனர். சில நாட்கள் டேட்டிங் செய்த இவர்கள், பின்னர் ஒரே வீட்டில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க ஆரம்பித்தனர். அடிக்கடி இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படங்களையும் இணையதளங்களில் பதிவேற்றி வருகின்றனர். மலைகா அரோராவிற்கு தற்போது 50 வயதாகிறது, அதே சமயத்தில் அர்ஜுன் கபூருக்கு 39 வயதுதான் ஆகிறது. தன்னை விட 11 வயது குறைந்த நபரை, இவர் டேட்டிங் செய்து வருவது இன்றளவும் பாலிவுட் திரையுலகில் பெரும் சர்ச்சையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது மலைகாவின் தந்தை தற்கொலை செய்திருப்பது இந்தி திரை நட்சத்திரங்கள் மட்டுமன்றி, ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 


மேலும் படிக்க | மலைக்கா அரோராவின் அழகை கூட்டிக் காண்பிக்கும் அழகிய ஆடைகள்! புகைப்படங்கள் வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ