பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர். பாலிவுட்டின் ஸ்டார் கிட்ஸ்களுள் ஒருவரான இவர், 2012ஆம் ஆண்டு திரையுலகிற்குள் நுழைந்தார். இவர் இந்தி திரையுலகின் பிரபல நடிகைகளான பரினிதி சோப்ரா, பிரியங்கா சோப்ரா, ஆலியா பட், கரீனா கபூர் உள்ளிட்ட பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்வி கபூர் மற்றும் குஷி ஆகியோர் இவருக்கு சகோதரிகளாவர். பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூர் இவரது உறவினர். அர்ஜுன் கபூர், பிரபல நடிகையும் மாடலுமான மலைகா அரோராவை காதலித்து வருகிறார்.
12 வயது மூத்த நடிகையுடன் காதல்..
மலைகா அரோராவிற்கு 49 வயது ஆகிறது. அவரது காதலரான அர்ஜுன் கபூருக்கு 37 வயது ஆகிறது. தன்னை விட 12 வயது மூத்த நடிகையை காதலித்து வரும் அர்ஜுன், இது குறித்து எங்கும் பேசுவதில்லை. இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 5 வருடங்களாக டேட்டிங் செய்து வருவதாக பேசப்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கையை ஊடகத்தின் கையில் சிக்கவடாமல் பாதுகாக்கும் அர்ஜுன் கபூருக்கு அப்படியே நேர்மாறாக உள்ளார் அவரது காதலி மலைகா.
நிர்வாண புகைப்படத்தை பதிவிட்ட காதலி..
மாடலிங் துறையில் பிரபலமாக விளங்கும் மலைகா அரோரா, அவரது வாழ்க்கையில் நடைபெறும் பல்வேறு விஷயங்களை சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார். தனது காதலரான அர்ஜுன் கபூருடன் உள்ள புகைப்படங்களையும் அவர் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று தனது ஸ்டோரி பக்கத்தில் மலைகா ஒரு புகைப்படத்தினை பதிவிட்டிருந்தார். அதில், நடிகர் அர்ஜுன் கபூரின் பிறப்புறுப்பு மட்டும் தலையனை வைத்து மூடப்பட்டுள்ளது. மற்றபடி உடலில் ஒற்று துணி கூட இல்லாமல் அர்ஜுன் கபூர் படுத்திருக்கும் புகைப்படத்தை மலைகா வெளியிட்டுள்ளார். அதனுடன் ‘என் சோம்பேறி பையன்..’(My Lazy Boy) என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வெகுண்டெழுந்துள்ளனர்.
‘என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா..’
தற்போது அர்ஜுன் மற்றும் மலைகாவின் கைவசம் எந்த படங்களும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இருவரும் பாலிவுட் ரசிகர்களையும் பிரபலங்களையும் தங்கள் பக்கம் ஈர்க்க இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக சில ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் சில ரசிகர்கள், இந்த புகைப்படத்தை பதிவிட்டு “என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா..” என்று மீம்ஸ்களையும் ஷேர் செய்து வருகின்றனர். மலைகா செய்த இந்த காரியம் ரசிகர்களை கோபப்படுத்தியதுடன் சில பிரபலங்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் திருமணம்..
பல நாட்களாக காதலில் உள்ள அர்ஜுன்-மலைகா இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இவர்கள் இருவருமே அப்படி ஒரு ஐடியா இல்லை என்பது போலத்தான் ஊடகத்திடம் கூறி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் மலைகா அரோரா கர்பமாக உள்ளதாக தகவல் பரவியது. இதை முற்றிலும் மறுத்த அர்ஜுன் கபூர் அவ்வாறு செய்தி பரப்பியவர்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வருத்தெடுத்தது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் ஒரு சிலர் இந்த ஜோடிக்கு ஆதரவு தெரிவித்தாலும் ‘கலாச்சாரம்,கட்டுப்பாடு’ குறித்து பேசும் சிலருக்கு இவர்களை பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ