தற்கொலைக்கு முயன்ற நடிகை மும்தாஜ்! இவருக்கு பின்னால் இப்படியொரு கதையா?
Latest News Actress Mumtaj : பிரபல கவர்ச்சி நடிகை மும்மதாஜ், தான் தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ள விவகாரம், தற்போது வைரலாகி வருகிறது.
Latest News Actress Mumtaj : தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக இருந்தவர், மும்தாஜ். இவர், கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் தலை காட்டாமல் இருக்கிறார். இந்த நிலையில், அவர் பேசியுள்ள விஷயம் ஒன்று பேசுபொருளாக மாறியிருக்கிறது.
ரசிகர்களை கட்டிப்பாேட்ட மும்தாஜ்:
‘மோனிஷா என் மோனலிசா’ என்ற படம் மூலம் அறிமுகமானவர், நடிகை மும்தாஜ். இந்த படத்தில் அவர் டி.ராஜேந்தருக்கு ஜோடியாக நடித்திருந்தார். 1999ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ஹிட் ஆனதை தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தது. இதில், கவர்ச்சியாக நடித்திருந்த இவரை அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியான சாக்லேட், லூட்டி ஆகிய படங்களிலும் தென்பட்டார்.
மும்தாஜ், நாயகியாக நடித்த படங்கள் மட்டுமன்றி, கேமியோ ரோல்களில் இவர் நடித்திருந்த படங்களும், வில்லியாக நடித்திருந்த படங்களும் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றன. அப்படி அவர் நடித்த ‘‘குஷி’ படமும் ஹிட் அடித்தது. இதில் இடம் பெற்றிருந்த ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’ பாடல் ஹிட் ஆனதற்கு ஒரு காரணம் இசையமைப்பாளர் தேவா என்றால், இன்னொரு காரணம் இவர்தான்.
மேலும் படிக்க | சிறுவயதில் செம க்யூட்டா இருக்கும் இந்த செலிபிரிட்டி ஜோடி யாரென்று தெரிகிறதா?
மரண வலியை அனுபவித்த மும்தாஜ்:
தற்போது திரையுலகில் இருந்து விலகியிருக்கும் மும்தாஜ், ஒரு ஊடகத்திற்கு பேட்டியளித்திருக்கிறார். அதில், ஒரு முறை தனக்கு இடுப்பு பகுதியை அசைக்க கூட முடியாத அளவிற்கு வலி ஏற்பட்டதாகவும் அந்த வலியால் தான் துடிதுடித்து போனதாகவும் கூறினார். மேலும், இதர்காக மருத்துவர்களை பார்த்தும் எந்த பயனும் அளிக்கவில்லை என கூறிய அவர், மருத்துவ பரிசோதனையில் தனக்கு Auto Immune நோய் பாதிப்பு இருந்ததை தெரிந்து கொண்டதாக கூறியிருக்கிறார். இந்த நோய் பாதிப்பினால் தன்னால் எழுந்து கூட நிற்க முடியாது என கூறிய அவர், எதுவும் செய்ய முடியாத நிலைக்கு தான் தள்ளப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.
தற்கொலை முயற்சி:
நோய் பாதிப்பால் மிகுந்த மன வேதனைக்கு உள்ளான மும்தாஜ், தொடர்ந்து இரண்டரை மணி நேரம் எல்லாம் அமர்ந்து அழுதிருப்பதாகவும், இதனால் தனக்கு மன நோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், தன்னை தனது அண்ணன், கணவர், கடவுள் ஆகியோர்தான் தன்னை அதிலிருந்து மீட்க உதவி செய்ததாகவும் இல்லையென்றால் தற்கொலை செய்ய முயற்சி செய்திருப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க | தலைவர் 171 படத்தில் இணைந்த புது நடிகர்! அட இவரு பெரிய ஆளாச்சே
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ