The GOAT First Choice Before Sneha : தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக விளங்கி வருகிறார், வெங்கட் பிரபு. இவரும், நடிகர் விஜய்யும் முதன்முதலாக கைக்கோர்த்திருந்த படம், தி கோட் (The Greatest Of All Time). இந்த படம், வெளியாவதற்கு முன்பு இதை பற்றி பேசியதை விட, ரிலீஸிற்கு பின்னர் பலர் இது குறித்து பேசி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வசூல் வேட்டையில் தி கோட் படம்:


விரைவில் சினிமாவை விட்டு விலகி, முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கும் நடிகர் விஜய்க்கு, கடைசி படத்திற்கு முந்தைய படமாக அமைந்தது, தி கோட். இந்த படத்தில் விஜய் தந்தை-மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். தந்தை ஹீரோவாக இருக்க, மகன் வில்லனாக வருகிறான். இவருக்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி செளத்ரி ஆகியோர் ஜாேடியாக நடித்திருக்கின்றனர். 


தி கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல், வைபவ், யுகேந்திரன், லைலா, ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மைக் மோகன், பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுதான் தி கோட் படம் மூலம் கம்-பேக் கொடுத்திருக்கிறார். அந்தகன் படத்திற்கு பிறகு, பிரசாந்திற்கு தி கோட் படமும் பெரிய ஹிட்டாக அமைந்திருக்கிறது. 


தி கோட் படம், முதல் நாளிலேயே சுமார் ரூ.126 கோடிக்கும் மேல் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. படம் வெளியாகி 6 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், இன்னும் தியேட்டர்களில் கில்லியாக நின்று பேசுகிறது. இரு தினங்களுக்கு முன்பு இப்படம், 300 கோடிக்கும் மேல் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டது. 


விஜய்-சினேகா ஜோடி:


நடிகர் விஜய்யும் சினேகாவும் 2003ஆம் ஆண்டு வெளியான ‘வசீகரா’ படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். அதன் பிறகு, 20 வருடங்கள் கழித்து முதன்முறையாக ‘தி கோட்’ படத்தில் மீண்டும் ஒன்றிணைந்து நடித்தனர். காந்தி-அனுவாக கணவன்-மனைவி கதாப்பாத்திரத்தல் கோட் படத்தில் இவர்கள் நடித்திருந்தது ரசிகர்களை குஷி படுத்தியது. சிறுவயதில் இந்த ஜோடியை படங்களில் பார்த்த ரசிகர்களுக்கு, இப்போதும் இப்படி இருவரையும் பார்ப்பது மகிழ்ச்சியளித்தது. 


மேலும் படிக்க | தி கோட் படத்தில் விஜயகாந்திற்கு வாய்ஸ் கொடுத்த பிரபல நடிகர்!! யார் தெரியுமா?


சினேகாவிற்கு பதில் நடிக்க இருந்தவர்..


இயக்குநர் வெங்கட் பிரபு, தி கோட் படத்தின் ரிலீஸிற்கு முன்பு கொடுத்த நேர்காணல்களை விட, ரிலீஸிற்கு பிறகு கொடுத்த நேர்காணல்கள்தான் அதிகமாக இருக்கிறது. அப்படி ஒரு நேர்காணலில்தான், சினேகாவின் கதாப்பாத்திரத்திற்கு முதலில் தேர்ந்தெடுத்த நடிகை குறித்து அவர் பேசியிருக்கிறார். 



விஜய்க்கு ஜோடியாக முதலில் தி கோட் படத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை நயன்தாரா தானாம். இது குறித்து அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தியபோது, அது ஓகே ஆகவில்லையாம். இதன் பிறகுதான், சினேகாவை தேர்ந்தெடுத்துள்ளனர். நடிகை நயன்தாரா ஏற்கனவே 2 படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


படம் பார்த்து நயன்தாரா சொன்ன விஷயம்..


நடிகை நயன்தாரா,  தி கோட் படம் பார்த்து விட்டு வெங்கட் பிரபுவிற்கு கால் செய்தாராம். சினேகா இதில் அசத்தலாக நடித்துள்ளதாகவும், அவரை தவிர வேறு யாராலும் இந்த கதாப்பாத்திரத்தில் நடித்திருக்க முடியாது என்றும் கூறியிருக்கிறார். இதை வெங்கட் பிரபு, தனது நேர்காணலில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 


மேலும் படிக்க | GOAT படத்தில் விஜய்க்கு பதில் ஹீரோவாக நடிக்க இருந்தவர்! ‘இந்த’ பிரபல ஹீரோவா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ