The GOAT Movie First Choice : தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாக இருக்கிறது, தி கோட். இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். ஆனால், இக்கதை முதலில் யாருக்காக எழுதப்பட்டது தெரியுமா?
தி கோட் திரைப்படம்:
தமிழ் திரையுலகின் ஜாலியான இயக்குநராக அறிப்படுபவர், வெங்கட் பிரபு. இவருடன் நடிகர் விஜய், முதன் முறையாக ‘தி கோட்’ (The Greatest Of All Time) படத்தில் கைக்கோர்த்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், சமீபத்தில் அனைத்து கிராஃபிக்ஸ் மற்றும் டெக்னாலஜி பணிகளும் நடைப்பெற்று முடிந்தது.
தி கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் தந்தை-மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இவருடன் சேர்ந்து, சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். 80களில் பிரபல நாயகனாக இருந்த மைக் மோகன், தி கோட் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இவரை இதுவரை நெகடிவ் ஷேட் கதாப்பாத்திரங்களில் பார்த்திராத ரசிகர்களுக்கு, தி கோட் படத்தில் இவரது கேரக்டர் புதுமையான முகத்தை காண்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் அஜித்..பிறகு விஜய்..
இயக்குநர் வெங்கட் பிரபு, சினிமா பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் ஆரம்பத்தில் படங்களில் நடிக்க மட்டுமே செய்தார். இவரும் விஜய்யும் சேர்ந்து ‘சிவகாசி’ திரைப்பத்தில் மாமன்-மச்சான் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இதையடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு 2011ஆம் ஆண்டு அஜித்தை வைத்து ‘மங்காத்தா’ படத்தை இயக்கினார். இப்படத்தை பார்த்த ரசிகர்கள், வெங்கட் பிரபுவை அஜித்தின் Fanboy என்று கூறி வந்தனர், சினிமாவை பொறுத்தவரை அஜித்தும் விஜய்யும் போட்டி நடிகர்களாக பார்க்கப்டுகின்றனர். அந்த வகையில் முதலில் அஜித்தை வைத்து படம் இயக்கிய வெங்கட் பிரபு, பின்னர் விஜய்யுடன் தி கோட் திரைப்படத்தில் கைக்காேர்த்திருக்கிறார்.
மேலும் படிக்க | 50 வயசு விஜய்யா இது? இவ்ளோ அழகா இருக்காறே!! GOAT பட போட்டோக்கள்..
நடிக்க இருந்த ஹீரோ..
தி கோட் திரைப்படம், இன்னும் சில நாட்களில் ரிலீஸாக இருக்கிறது. இதையடுத்து, இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெங்கட் பிரபு கலந்து கொண்டார். அப்போது படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் சொன்னது மட்டுமன்றி, இன்னும் சில தகவல்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அது, தி கோட் திரைப்படம் முதலில் விஜய்க்காக எழுதப்பட்டது இல்லை என்பதுதான்.
இந்த கதையை, வெங்கட் பிரபு முதலில் ரஜினி மற்றும் தனுஷிற்காக எழுதினாராம். தந்தையாக ரஜினியையும், மகனாக தனுஷையும் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தாராம். ஆனால், அத சில காரணங்களால் சாத்தியமற்று போனதாக கூறப்படுகிறது. அதன் பிறகுதான், டீ-ஏஜிங் தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொண்ட வெங்கட் பிரபு விஜய்யையே, மகனாகவும் தந்தையாகவும் நடிக்க வைத்திருக்கிறார்.
எப்போது ரிலீஸ்?
புதிதாக “தமிழக வெற்றிக்கழகம்” என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய், அடுத்து தனது 69வது படத்தில் நடித்து முடித்தவுடன் முழு நேரமாக அரசியலில் இறங்க இருக்கிறார். இந்த நிலையில், ஜாலியாக ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்த இவர், தி கோட் படத்தின் கதையை ஓகே செய்தார். இப்படம், விநாயகர் சதுர்த்தியை அடுத்த வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருப்பதால் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.
மேலும் படிக்க | தி கோட் டிரைலர்: சம்பவம் செய்த வெங்கட் பிரபு! ரசிகர்களின் ரியாக்ஷன் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ