Actress Meera Chopra Rakshit Kejriwal Wedding Latest News In Tamil : தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர் நடிகைகளின் திருமணம் குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த லிஸ்டில், தற்போது பிரபல நடிகையான மீரா சோப்ராவும் சேர்ந்திருக்கிறார். இந்த நடிகை யார் தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் படங்களில் நடித்த மீரா சோப்ரா:


2005ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘அன்பே ஆருயிரே’ படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர், மீரா சோப்ரா. இந்த படத்தில் இவர் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருப்பார். இப்படத்தில் இவர் நிலா என்ற பெயரில் அறிமுகமானார். அதிலிருந்து தமிழ் படங்களில் இவரை நிலா என்றே அனைவரும் குறிப்பிட்டு வந்தனர். 22 வயதில் திரையுலகிற்குள் நுழைந்தார். அன்பே ஆருயிரே படத்திற்கு பிறகு,‘பங்காரம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவர் அவன் கல்யாணுடன் சேர்ந்து நடித்திருந்தார். இதையடுத்து அப்படியே பாலிவுட் பக்கம் சென்று விட்டார். 


கோலிவுட் திரையுலகை பொறுத்தவரை, ஒரு சில படங்களிலேயே நடித்திருந்தாலும் சில நடிகர்களையும் நடிகைகளையும் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். அப்படி, ரசிகர்களால் மறக்கப்படாத ஒரு நடியாக இருந்தவர், மீரா சோப்ரா. தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘ஜகன் மோகினி’ படத்தில் நடித்திருந்த இவர், அதன் பிறகு கோலிவுட் பக்கமே தலை வைத்து பார்க்கவில்லை. எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்திருந்த ‘இசை’ படத்தில் க்ளைமேஸ் காட்சியில் மட்டும் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் பரத்தின் கில்லாடி படத்திலும் நாயகியாக நடித்தார். 



மேலும் படிக்க | Ajith Kumar: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்குமாரின் தற்போதைய போட்டோ!


40 வயதில் திருமணம்..


மீரா சோப்ராவிற்கு தற்போது 40 வயதாகிறது. இவர், ரக்ஷித் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியானது. மீரா, தனது சமீபத்திய நேர்காணல்கள் சிலவற்றிலும் தனக்கு வரும் மார்ச் மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மீரா சோப்ரா நேற்று (மார்ச் 12) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் ஆனதை போட்டோக்கள் பதிவிட்டு தகவலை உறுதி செய்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எப்போதும் மகிழ்ச்சி, சண்டை, சிரிப்பு, கண்ணீர் மற்றும் நினைவுகளின் வாழ்நாள் முழுவதும், எல்லா பிரப்பும் உனக்காக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். 



இந்த க்யூட் கப்புளிற்கு ரசிகர்கள் அனைவரும் ஹார்டீன்களை அள்ளி தெளித்து வருகின்றனர். பிரபலங்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். 


பிரியங்கா சோப்ராவின் தங்கை:


பாலிவுட்-ஹாலிவுட்டில் மிகப்பெரிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ரா, மீரா சோப்ராவின் சொந்தக்கார சகோதரியாவார். பிரியங்கா சோப்ராவும், தமிழ் திரையுலகில் மூலமாகத்தான் முதன் முதலில் அறிமுகமானார். இவருக்கு தமிழ் படங்கள் பெரிதும் கை கொடுக்காமல் பாேக அப்படியே இந்தி திரையுலக பக்கம் சென்று, இப்போது உலகே வியந்து பார்க்கும் ஐகான் ஆக திகழ்ந்து வருகிறார். பிரியங்கா சோப்ராவின் வழியே நடக்க இருந்த மீராவிற்கு திரையுலகம் சரியாக வரவேற்பை அளிக்கவில்லை. 


தமிழில் இவர் நடித்த அன்பே ஆருயிரே, மருதமலை, காளை உள்ளிட்ட படங்கள் ஹிட் அடித்துள்ளன. தெலுங்கிலும் ஓரளவிற்கு பிரபலமாகிவிட்டார். அதற்கடுத்து இந்தியில் கடைசியாக கடந்த ஆண்டு சேஃப்ட் எனும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். 


மேலும் படிக்க | Lover OTT: லவ்வர் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது? வெளியானது செம அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ