ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ரூ.3 கோடி வாங்கும் பிரபல நடிகை!

Priyanka Chopra: பாலிவுட்டின் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா, ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ரூ.3 கோடி வரை வாங்குகிறாராம். 

1 /7

பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டிற்குள் சென்ற நடிகைகளுள் ஒருவர், பிரியங்கா சோப்ரா. 

2 /7

பிரியங்கா, விஜய்க்கு ஜோடியாக தமிழில், 2002ஆம் ஆண்டில் வெளியான தமிழன் படத்தில் நடித்திருந்தார். 

3 /7

பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் நடிகரும் ஆங்கில பாடகருமான நிக் ஜோனஸை 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

4 /7

நிக்-பிரியங்காவிற்கு மால்தி என்ற மகள் உள்ளார். 

5 /7

வழக்கமாக, அனைத்து பிரபலங்களும் சமூக வலைதளம் மூலமாகவும் சம்பாதிப்பதுண்டு. ஏதாவது ஒரு பொருளுக்கு அல்லது பிராண்டிற்கு விளம்பர தூதுவராக இருப்பது, அதை தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு அதன் மூலம் ஒரு தொகையை சம்பாதிப்பது வழக்கம். 

6 /7

பிரியங்கா சோப்ராவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைய பிராண்டுகளை ப்ரமோட் செய்துள்ளார். 

7 /7

இப்படி விளம்பரத்திற்காக இவர் பதிவிடும் போஸ்டுகள் பெரிதளவில் பேசப்படுவதுண்டு. பிரியங்கா, ஒரு போஸ்டிற்கு 3 கோடி வரை சம்பளமாக பெருகிறாராம்.