காதலில் விழுந்த சாய் பல்லவி… அதுவும் 10 வருடங்களாக! யார் அந்த நபர்?
Actress Sai Pallavi Love : நடிகை சாய் பல்லவி, தனது காதல் வாழ்க்கை குறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Actress Sai Pallavi Love : நடிகை சாய் பல்லவி, தனது காதல் வாழ்க்கை குறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் மட்டுமன்றி, இந்திய அளவில் பெரிய நடிகையாக வளர்ந்து நிற்பவர் சாய் பல்லவி. இவருக்கு, தமிழ் திரையுலகில் ரசிகர்கள் அதிகம். இதற்கு காரணம், சாய் பல்லவி இதுவரை பெரிதாக எந்த சர்ச்சையிலும் சிக்காததும், கவர்ச்சியாக எந்த படத்திலும் நடிக்காததும்தான். நடிகை சாய் பல்லவி, சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருக்கிறார். அதில் ஒரு படம், தாம்தூம். இந்த படத்தில் அவர் ஒரு காட்சியில் மட்டும் நாயகியுடன் இருக்கும் ஒரு கதாப்பாத்திரத்தில் வருவார். கோத்தகிரியை சேர்ந்த சாய் பல்லவி, முதலில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து அறிமுகமானது பிரேமம் படத்தில்தான். இந்த படத்தில் ‘மலர் டீச்சர்’ கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த இவரை, தமிழ் ரசிகர்கள் மட்டுமன்றி மலையாள ரசிகர்களுக்கும் பிடித்திருந்தது.
தொடர்ந்து இன்னும் பல மலையாளம் மற்றும் தெலுங்கு படத்திலும் நடித்த சாய் பல்லவி, தமிழிலும் தியா, மாரி 2, என்ஜிகே கார்கி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது. சாய் பல்லவி நாயகியாக மாறும் முன்பே, உங்களில் யார் பிரபுதேவா நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருந்திருக்கிறார். தெலுங்கிலும் சில ரியாலிட்டி டான்ஸ் நிகழ்ச்சிகளில் இவர் பங்கு பெற்றுறிக்கிறார்.
நடிகை சாய் பல்லவி, தென்னிந்திய அளவில் பிரபலமாகியிருந்தாலும், இந்தி படங்களில் பெரிதாக நடிக்காமல் இருந்தார். அந்த வகையில் தற்போது நிகேஷ் திவாரி இயக்கும் ராமாயண கதை கொண்ட படத்தில் சாய் பல்லவி சீதை கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இவருக்கு ஜோடியாகவும் ராமர் கதாப்பாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்திற்கான லுக் டெஸ்ட் நடைப்பெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆனது.
இந்நிலையில் தற்போது நடிகை சாய் பல்லவி, தனது காதல் குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். அதில், மகாபாரதம் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. குறிப்பாக அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த 10 ஆண்டுகளாக அபிமன்யுவை பற்றி நிறைய படித்து அறிந்து இருக்கிறேன். அப்பொதில் இருந்து அவரை காதலித்து வருகிறேன் என கூறியுள்ளார். இவருடைய இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ