Coolie Cast : கூலி படத்தில் புதிதாக இணையும் ‘அந்த’ இந்தி நடிகர்!! யாருன்னு தெரியுமா?

Latest News Coolie Cast And Crew Details : ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தில் எந்தெந்த நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர் தெரியுமா? முழு விவரத்தை இங்கு பார்ப்போம். 

Latest News Coolie Cast And Crew Details : தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகராக விளங்கி வருபவர், நடிகர் ரஜினிகாந்த். கபாலி படத்திற்கு பிறகு, இளம் இயக்குநர்களுடன் சேர்ந்து பணியாற்ற ஆரம்பித்த இவர், தற்போது லோகேஷ் கனகராஜ் உடன் ‘கூலி’ படத்திற்காக கைக்கோர்த்திருக்கிறார். வேட்டையன் படத்தில் நடித்து முடித்த பிறகு, இந்த படத்தின் வேலைகளில் இறங்கிய இவர், அதன் டெஸ்ட் ஷூட்டிலும் கலந்து கொண்டார். அடுத்த வருடம் வெளிவர இருக்கும் இப்படத்தில், நடிக்க இருப்பவர்களின் விவரத்தை கடந்த சில நாட்களாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகின்றனர். இதில், ஒரு இந்தி நடிகரும் இணைய இருக்கிறார். அவர் யார் தெரியுமா? 

1 /8

கோலிவுட் திரையுலகில், டாப் இயக்குநர்களுள் ஒருவராக விளங்கி வருபவர் லோகேஷ் கனகராஜ். வெகு சில படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் அவை அனைத்தும் ஹிட் அடித்து விட்டதால் இவர் கைக்கோர்க்கும் நடிகர்களும் பெரிய நடிகர்களாக இருக்கின்றனர். ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்க இருக்கும் இவர், இதில் இணைந்திருக்கும் நடிகர்கள் குறித்த விவரங்களை கடந்த சில நாட்களாக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகிறார். 

2 /8

கூலி படத்தில் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக இணைந்திருக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் ‘விக்ரம்’ படத்தில் பணியாற்றியிருக்கிறார். மலையாளத்தில் ஹிட் ஆன பல படங்களுக்கும் இவர்தான் ஒளிப்பதிவாளர். 

3 /8

மலையாளத்தில் பிரபலமான நடிகராக விளங்குபவர் சௌபின் சாஹிர். இவர் சமீபத்தில் நடித்திருந்த மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் பெரிய ஹிட் அடித்திருந்தது. இந்த நிலையில், இவர் கூலி படத்தில் தயாள் எனும் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். 

4 /8

பிரபல நடிகையும், நடிகர் கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதிஹாசன், கூலி படத்தில் ‘பிரீத்தி’ எனும் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். 

5 /8

ரஜினியுடன் 80களில் பல ஹிட் படங்களில் நடித்த சத்யராஜ், 38 வருடங்களுக்கு பிறகு ‘கூலி’ படத்தில் இணைந்திருக்கிறார். இவரது கதாப்பாத்திரத்தின் பெயர் ‘ராஜசேகர்’. 

6 /8

தெலுங்கு திரையுலகின் டாப் ஸ்டாரான நாகார்ஜுன், ரஜினியுடன் கூலி படத்தில் இணைந்து நடிக்கிறார். இதில், இவரது பெயர் சைமன். தோழா படத்தில் நடித்த பிறகு, 8 வருடங்கள் கழித்து இப்போதுதான் தமிழில் நடிக்க வருகிறார். 

7 /8

கன்னட மொழியில் பிரபல நடிகராக விளங்கும் உப்பேந்திரா, கூலி படத்தில் கலீஷா எனும் கதாப்பாத்திரத்தில் வருகிறார். சத்யம் படத்தில் நெகடிவ் ஷேட் கதாப்பாத்திரத்தில் நடிதிருந்த இவர் 16 வருடங்கள் கழித்து இப்போதுதான் கோலிவுட் பக்கம் எட்டி பார்க்கிறார். 

8 /8

இந்தியில் பெரிய நடிகராக விளங்கும் ‘அமீர் கான்’ கூலி படத்தில் இணைய இருப்பதாக முன்னரே தகவல்கள் வெளியானது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போஸ்டர்கள் வெளியாவதை அடுத்து, இன்று (செப்டம்பர்-2), இவரது கதாப்பாத்திரம் குறித்த அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.