திருமணமானவருடன் சாய் பல்லவிக்கு காதலா? அதுவும் 2 குழந்தை இருக்காம்..
Latest News Sai Pallavi Love : நடிகை சாய் பல்லவி, திருமணமான ஒருவருடன் காதல் உறவில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Latest News Sai Pallavi Love : தமிழ் திரையுலகில் மட்டுமன்றி, இந்திய அளவில் பெரிய நடிகையாக வளர்ந்து நிற்பவர் சாய் பல்லவி. இவருக்கு, தமிழ் திரையுலகில் ரசிகர்கள் அதிகம். இதற்கு காரணம், சாய் பல்லவி இதுவரை பெரிதாக எந்த சர்ச்சையிலும் சிக்காததும், கவர்ச்சியாக எந்த படத்திலும் நடிக்காததும்தான்.
குழந்தை நட்சத்திரமாக..
நடிகை சாய் பல்லவி, சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருக்கிறார். அதில் ஒரு படம், தாம்தூம். இந்த படத்தில் அவர் ஒரு காட்சியில் மட்டும் நாயகியுடன் இருக்கும் ஒரு கதாப்பாத்திரத்தில் வருவார். கோத்தகிரியை சேர்ந்த சாய் பல்லவி, முதலில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து அறிமுகமானது பிரேமம் படத்தில்தான். இந்த படத்தில் ‘மலர் டீச்சர்’ கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த இவரை, தமிழ் ரசிகர்கள் மட்டுமன்றி மலையாள ரசிகர்களுக்கும் பிடித்திருந்தது.
தொடர்ந்து இன்னும் பல மலையாளம் மற்றும் தெலுங்கு படத்திலும் நடித்த சாய் பல்லவி, தமிழிலும் தியா, மாரி 2, என்ஜிகே கார்கி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது. சாய் பல்லவி நாயகியாக மாறும் முன்பே, உங்களில் யார் பிரபுதேவா நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருந்திருக்கிறார். தெலுங்கிலும் சில ரியாலிட்டி டான்ஸ் நிகழ்ச்சிகளில் இவர் பங்கு பெற்றுறிக்கிறார்.
பாலிவுட்டில் அறிமுகம்..
நடிகை சாய் பல்லவி, தென்னிந்திய அளவில் பிரபலமாகியிருந்தாலும், இந்தி படங்களில் பெரிதாக நடிக்காமல் இருந்தார். இந்த நிலையில், அவர் தற்போது ஒரு இந்தி படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நிகேஷ் திவாரி இயக்கும் ராமாயண கதை கொண்ட படத்தில் சாய் பல்லவி சீதை கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இவருக்கு ஜோடியாகவும் ராமர் கதாப்பாத்திரத்திலும் நடிப்பது யார் தெரியுமா? பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர். சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்திற்கான லுக் டெஸ்ட் நடைப்பெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகின.
மேலும் படிக்க | சாய் பல்லவிக்கு கல்யாணம் ஆயிடுச்சா? வைரலாகும் போட்டோ.. உண்மை என்ன?
திருமணமான நடிகருடன் காதல்?
இதுவரை அதிகமாக எந்த சர்ச்சையிலும் சிக்காத நடிகைகளுள் ஒருவர் சாய் பல்லவி. இவர் குறித்து காதல் கிசுகிசு கூட பெரிதாக எழுந்ததில்லை. அமரன் படத்தின் பூஜையின் போது, இவர் மாலை போட்டுக்கொண்டு அப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அருகில் நின்றிருந்தார். இதைப்பார்த்த சில வடநாட்டு ரசிகர்கள், இருவருக்கும் திருமணம் ஆகி விட்டதாக கிளப்பி விட்டனர். பின்னர் சாய் பல்லவி இதற்கு விளக்கம் தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டார். இந்த நிலையில், தற்போது மீண்டும் அவரை ஒரு சர்ச்சை சுத்து போட்டிருக்கிறது.
நடிகை சாய் பல்லவி திரைப்பட நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும், அந்த நடிகருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல், கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இது குறித்து சாய் பல்லவியும் எதுவும் பேசாமல் இருக்கிறது.
சாய் பல்லவி நடிக்கும் புதிய படம்..
நடிகை சாய் பல்லவி, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் ‘தண்டெல்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம், வரும் அக்டோபர் மாதம் வெளியாகிறது.
மேலும் படிக்க | நடிகை சாய் பல்லவி 10 வருடங்களாக காதலிக்கும் நபர்! யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ