Latest News Actress Samantha Marriage Proposal : கடந்த மூன்று நாட்களாக, இந்திய அளவில் இணையதளங்களில் ட்ரெண்டிங்கில் இருப்பது, நாக சைதன்யாவும், சோபிதா துலிபலாவும், சமந்தாவும்தான். காரணம், கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவிற்கும், அவரது பல நாள் காதலியும் நடிகையுமான சோபிதாவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. இதையடுத்து, நடிகை சமந்தா குறித்த பதிவுகளும் வைரலாகி வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாக சைதன்யா-சோபிதா நிச்சயதார்த்தம்..


நடிகர் நாக சைதன்யாவும், பல தென்னிந்திய படங்களில் நடித்திருக்கும் சோபிதா துலிபலாவும் காதலித்து வருவதாக கடந்த 2 ஆண்டுகளாகவே தகவல்கள் பரவி வருகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில், மூன்று நாட்களுக்கு முன்னர் இருவருக்கும் திருமண நிச்சயார்த்தம் நடைப்பெற்ற செய்தி வெளியானது. இது, எதிர்பார்த்த விஷயம்தான் என்றாலும், இது குறித்து ரசிகர்கள் பலர் தொடர்ந்து விமர்சனங்களை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றனர். ஆனால், நாக சைதன்யா-சோபிதாவின் குடும்பம் இது குறித்து எதுவும் கண்டுகொள்ளவில்லை. 


சமந்தாவிற்கு ஆறுதல்..


சமந்தாவும் நாக சைதன்யாவும் 2017ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இந்த திருமணம் 2021ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. இவர்களின் திருமண முறிவிற்கான காரணம் குறித்து வெளியில் தெரியவில்லை என்றாலும், பலர் சமந்தவைதான் அப்போது இதற்கு காரணமாக கூறினர். ஆனால், இப்போது நாக சைதன்யா சோபிதாவுடன் உறவில் இருந்தது உறுதியான பிறகு பலர் சமந்தாவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஒரு ரசிகரும் இது குறித்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 


வைரலாகும் ப்ரப்பாேஸல் வீடியோ..


ரசிகர் ஒருவர், சமந்தாவிற்கு என்ன நேர்ந்தாலும் தான் அவருக்கு துணையாக கூடவே இருப்பேன் என்றும், தயவு செய்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் காமெடி கான்செப்ட் ரீல்ஸ் வீடியோ ஒன்றினை பதிவிட்டிருந்தார். நார்மலான ரீல்ஸ் வீடியோவாக இருந்த இது, சமந்தா வந்து கமெண்ட் செய்தவுடன் வைரலாக மாறியது.



அந்த இளைஞர் ரீல்ஸ் வீடியோவின் பின்னணியில் ஜிம் புகைப்படங்களை இணைத்திருந்தார். அந்த போட்டாேக்கள் தன்னை கிட்டத்தட்ட சம்மதிக்க வைத்ததாக கமெண்ட் செய்திருக்கிறார். இதையடுத்து, இந்த வீடியோவோடு சேர்த்து சமந்தாவின் கமெண்டும் வைரலாகி வருகிறது. 


மேலும் படிக்க | Samantha: சமந்தாவிற்கு 2வது திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?


ரசிகர்கள் எதிர்ப்பு ஏன்?


நாக சைதன்யா-சோபிதாவின் திருமண செய்தியை கேட்ட ரசிகர்கள் பலர் கொதித்தெழுந்து சூடான பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். சமந்தாவுடன் திருமண உறவில் இருந்த போதே, நாக சைதன்யா சோபிதாவுடன் உறவில் இருந்ததாகவும் இதுதான் அவர்களின் திருமணம் பிளவுபட்டு போவதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அந்த சமயத்தில் சமந்தா “ஊ அண்டாவா..” பாடலில் அறைகுறை ஆடையுடன் நடனமாட சம்மதித்ததுதான் காரணம் என்று பலர் தங்கள் இஷ்டத்திற்கு கருத்துகளை தெரிவித்து வந்தனர். 


இப்போது கூட, நாக சைதன்யாவை திருமணம் செய்து கொள்ள இருக்கும் நடிகை சோபிதாவை அனைவரும் பழிக்கிறார்களே தவிர, சம்பந்தப்பட்ட நாக சைதன்யாவை பெரும்பாலானோர் எதுவுமே கூறவில்லை. இதனால், இந்த சமூகம் எந்த தவறு நேர்ந்தாலும் அதற்கான பழியை பெண் மீது போடுவதற்கே காத்துக்கொண்டிருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். ஒரு சிலர், தந்தை நாகார்ஜுனா போலவே மகனும் இருப்பதாக கிண்டலடித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | நாக சைதன்யா-சோபிதா திருமண நிச்சயதார்த்தம்! சமந்தா ரியாக்‌ஷன் என்னவா இருக்கும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ